Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜிஆர் சுவாமிநாதன் சாதி, மதம் பார்க்க மாட்டார்! அனைவருக்கும் சமநீதியை வழங்கியவர்! களத்தில் வக்கீல்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் முயற்சி, நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் எனவும், நீதித்துறையை பாதுகாக்க உடனடியாக தலையிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இளம் வழக்கறிஞர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோரிய வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நேரடியாக திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கு உள்ள தீபத்தூணிலேயே தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

GR Swaminathan Thirupparankundram pariliament

திருப்பரங்குன்றம் தீபத்தூண்

இந்த உத்தரவையடுத்து தீபம் ஏற்றுவதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறி, காவல்துறை மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க மறுத்தது. மேலும், திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இம்பீச்மென்ட் நோட்டீஸ்

இந்த நிலையில் தான், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சமூக மற்றும் மத விவகாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் தீர்ப்புகளை தொடர்ந்து வழங்கி வருவதாகக் குற்றம்சாட்டி, இந்தியா கூட்டணி எம்.பிக்கள் சார்பில் இம்பீச்மென்ட் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பதவி நீக்க முயற்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட 154 வழக்கறிஞர்கள், நீதிபதி சுவாமிநாதன் மீதான பதவி நீக்கத் தீர்மானத்தை ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும் என மக்களவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இம்பீச்மென்ட் நோட்டீஸ்

இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் முயற்சி, நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் எனவும், நீதித்துறையை பாதுகாக்க உடனடியாக தலையிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இளம் வழக்கறிஞர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளனர். அதில்," "பதவி நீக்கத் தீர்மானம் முற்றிலும் நியாயமற்றது; அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜிஆர் சுவாமிநாதன்

அந்தக் கடிதத்தில், 2017 முதல் 2025 வரை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 73,505 வழக்குகளுக்கு தீர்வு வழங்கியுள்ளார் என்றும், இது நிலுவை வழக்குகளைக் குறைப்பதில் அவரது அபாரமான பங்களிப்பை வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதம், ஜாதி, அரசியல் பாரபட்சம் இன்றி சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சமநீதியை வழங்கியவர் என்றும் வழக்கறிஞர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

வழக்கறிஞர்கள் போராட்டம்

பதவி நீக்க முயற்சிக்கான உண்மையான காரணம், அவர் சமீப காலங்களில் தமிழக அரசுக்கு எதிராக வழங்கிய கடுமையான தீர்ப்புகளே என்றும், நீதித்துறையின் தீர்ப்புகளை குறிவைத்து இம்பீச்மென்ட் நடைமுறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்த முயற்சி நடக்கிறது என்றும் அந்தக் கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது நீதித்துறையில் பயம் மற்றும் அழுத்தத்தை உருவாக்கும் அபாயம் கொண்டது என்றும், இந்திய அரசியலமைப்பையும் நீதித்துறை சுதந்திரத்தையும் பாதுகாக்க குடியரசுத் தலைவர் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் இளம் வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தொடங்கிய இந்த சர்ச்சை, தற்போது நீதித்துறை சுதந்திரம் - அரசியல் தலையீடு என்ற பெரிய விவாதமாக மாறியுள்ள நிலையில், இம்பீச்மென்ட் நோட்டீஸ் தொடர்பாக தமிழக அளவில், வழக்கறிஞர்கள் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு ஆதரவாக கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+