தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வூதியம்.. கஜானா காலியாகும்.. கிருஷ்ணசாமி
மதுரை: தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு எந்த வகையிலும் பலன் இல்லை. பட்ஜெட்டில் 20 சதவீத நிதி புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு ஒதுக்கப்படும்.
தமிழகம் ஏற்கெனவே கடுமையான நிதிப்பற்றாக்குறையில் உள்ள நிலையில் பற்றாக்குறை மேலும் அதிகமாகும். இதனால் தமிழகத்தில் வேறு எந்த புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. கஜானா காலியாகும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

மதுரை அழகர் கோவில் சாலை பகுதியில் இருக்கக்கூடிய தனியார் உணவு விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மதுரையில் 7வது மாநில மாநாடு நடைபெறுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, "புதிய தமிழகம் கட்சி 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு மதுரை பாண்டிகோவில் அருகே ஜன.7-ல் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்க உள்ளனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி மாநாடு நடைபெறுவதால் தேர்தலை ஒட்டி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றுவோம். மதுரை மாநாட்டில் 2026 தேர்தல் தொடர்பான பொதுவான வழிகாட்டுதல்கள் இடம் பெறும். எப்படி தேர்தலை அணுக வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவோம்.
தேர்தல் கூட்டணி குறித்து எங்கள் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் மாதத்துக்கு பிறகு எப்போது வேண்டுமனாலும் முடிவெடுப்போம். அரசியல் அதிகாரம் மட்டுமே விளிம்பு நிலை மக்களுக்கு தீர்வு தரும். அந்த வகையில் எங்கள் கூட்டணி பாதை இருக்கும். மாநாட்டில் எங்கள் அரசியல் பாதை எதை நோக்கி இருக்கும் என்பதை அறிவிப்போம்.
மாநாட்டில் பொதுவான அணுகுமுறைகளை தெரிவிப்போம். மாநாட்டு தீர்மானங்களே எங்கள் அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்யும். உறுதியான கூட்டணி அறிவிப்பு வெளியாக காலம் ஆகும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? இருக்காதா? என்ற கேள்வி உள்ளது. இதற்கு விரைவில் விடை தெரிய போகிறது.
தேர்தலை மனதில் வைத்து உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் மற்றும் பொங்கல் பரிசுத் திட்டத்தை திமுக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் கடந்த காலங்களில் அமலில் இருந்து ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தவே அவர்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு எந்த வகையிலும் பலன் இல்லை. பட்ஜெட்டில் 20 சதவீத நிதி புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு ஒதுக்கப்படும்.
தமிழகம் ஏற்கனவே கடுமையான நிதிப்பற்றாக்குறையில் உள்ள நிலையில் பற்றாக்குறை மேலும் அதிகமாகும். இதனால் தமிழகத்தில் வேறு எந்த புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் கஷ்டப்பட வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்ட திட்டம் போல் இருக்கிறது. கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் அடுத்த நிதியாண்டில் வந்தால் மட்டுமே அமல்படுத்த முடியும். இல்லாவிட்டால் அமல்படுத்த முடியாது. வருவாய் இல்லாமல் அமல்படுத்தினால் கஜானா முழுமையாக காலியாகும்.
நேற்று முன்தினம் பொங்கல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் அறிவித்திருக்கிறார்கள். 3,000 எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படவில்லை. இருளை நீக்கி ஒளி ஏற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம். பிரபஞ்சமே அதில் தான் உள்ளதுஒளி தான் பிரதானம்- அதை அடிப்படையாக வைத்து தான் தீபம் ஏற்றப்படுகிறது . ஆனால் நீதிமன்றம் உத்தரவு கிடைக்கப் பிறகும் தடை விதித்திருப்பது சரியான முறை அல்ல .
தமிழக அரசு இவ்வளவு விடாப்பிடியாக இருக்க வேண்டும் என்பது சரியானது அல்ல" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications