ஹய் ஹய்யா.. தமிழ்நாடு சூப்பர் மார்க்கெட்டில் இனிமே இதெல்லாம் கிடைக்க போகுதாம்.. ராதாகிருஷ்ணன் அதிரடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் முக்கிய செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.. கூட்டுறவுத்துறையின் அடுத்த அதிரடியாக இந்த உத்தரவை ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, சென்னை, கொத்தவால்சாவடி, தாத்தா முத்தையப்பன் தெருவில் வ.உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டக சாலையின் புதிய நியாயவிலைக் கடையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தமிழக ரேஷன் கடைகளில் மினி சூப்பர் மார்க்கெட் என்ற முக்கிய தகவலை தெரிவித்திருந்தார்.

Important announcement by Radhakrishnan and Small grains are sold in supermarkets

ரேஷன் கடைகள்: குறிப்பாக, "தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மக்களுக்கு முக்கிய சேவைகளை அளித்து வருகின்றது. அரசின் சார்பில் கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தரமாகவும், தங்குதடையின்றியும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.. மொத்தம் 35,941 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3,516 நியாயவிலைக்கடைகள் சொந்த கட்டிடங்களிலும், 24,179 நியாயவிலைக்கடைகள் வாடகை இன்றி பொது கட்டிடங்களிலும், 7,952 நியாயவிலைக் கடைகள் வாடகை கட்டிடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

Important announcement by Radhakrishnan and Small grains are sold in supermarkets

காலி பணியிடங்கள்: நியாயவிலைக் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி வழங்குவதற்கும், பொதுமக்கள் காத்திருக்காமல் இருக்கவும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி மினி சூப்பர் மார்க்கெட் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு நியாயவிலைக் கடையில் உள்ள 6,500 காலிபணியிடங்களை நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு மதிப்பீடு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணியாளர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றொரு குட்நியூஸ் அறிவித்துள்ளார்.. மதுரை, பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகத்தில், பாண்டியன் சில்க்ஸ் விற்பனை நிலையத்தை, துறை செயலர் ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்தாண்டு, சிறுதானிய ஆண்டு விழாவை முன்னிட்டு, கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.. கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள, 22 ஆயிரம் சங்கங்கள் மக்களின் அன்றாட வாழ்வியல் சேவையில் முக்கிய பங்கு வகிக்கின்றன" என்றார்.

Important announcement by Radhakrishnan and Small grains are sold in supermarkets

ராதாகிருஷ்ணன்: தொடர்ந்து ராதாகிருஷ்ணன் பேசும்போது, விற்பனையாகக்கூடிய பொருட்களை சூப்பர் மார்க்கெட்களில் விற்க அறிவுறுத்தியுள்ளோம்.. கூட்டுறவு கடன் சங்கங்களை, 'ரூரல் மார்ட்' ஆகவும் பல்முனை சேவை மையமாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தும், 2024 டிசம்பர் 31க்குள், 'கோர் பாங்கிங்' இணைப்பில் கொண்டு வரப்படும். இதற்காக, 'நபார்டு' வங்கியுடன் இணைந்து, 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம், 24 வகையான கூடுதல் பணிகளை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். மொத்தம் 5,784 ரேஷன் கடைகளுக்கு, ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றுள்ளோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+