Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் 50 பவுன் தங்கம், 22 லட்சம் ரொக்கம்.. டிராக்டரில் 2 கோடி பொருள்.. அசர வைத்த தாய்மாமன் சீர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: 'மானூத்து மந்தையில் மாங்குட்டி பெத்த மயிலே.. தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி, அவன் தங்க கொலுசு ஒன்னு தாராண்டி.. சீரு சுமந்த சாதி சானமே.. ஆறு கடந்தால் ஊரு வருமே' தாய்மாமன் சீர் தொடர்பான பாடல் பல ஆண்டுகளாக இருக்கிறது. சாதி கடந்து இந்த பாடல் மதுரை முழுவதும் ஒலிக்கும். மதுரை வட்டாரங்களில் தாய்மாமன் சீர் என்பது பெரிய பாரம்பரியமாகும். மதுரையில் 5 டிராக்டர்களில் பொருட்கள், பணமாலைகள், 50 பவுன் நகை மற்றும் ரூ.22 லட்சம் உள்பட ரூ.2 கோடிக்கு தாய்மாமன்கள் சீர்வரிசை கொண்டு வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்கள்.

மதுரை அழகப்பன்நகரை அடுத்த முத்துப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் என்பவர் மதுரை பரவை மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா. ரம்யாவின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஆகும். ரம்யா அரசுப்பள்ளி ஆசிரியையாக உள்ளார். ரம்யா விக்னேஷ் தம்பதிக்கு ஆதேஷ் விக்ரம் (வயது 8), சாய்ஸ்ரீ (6) என இரு குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தார்க்ள.

In Madurai maternal uncles gave 50 sovereigns of gold 22 lakhs in cash and 1000 items in a tractor


மதுரை முத்துப்பட்டி காதணி விழா

மதுரை அடுத்த முத்துப்பட்டியில் உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம் காதணி விழா வெகு சிறப்பாக நடந்தது. விழாவில் ஆசிரியை ரம்யாவின் சகோதரர்களான திண்டுக்கலை சேர்ந்த ரஞ்சித்குமார், ராஜபாண்டி ஆகிய இருவரும் தாய்மாமன் சீர்வரிசையை கொண்டு வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த சீர்வரிசைகளை கண்டு அந்த பகுதி மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

5 டிராக்டர்களில் 1,130 பொருட்கள்

திண்டுக்கல் அண்ணன் தம்பிகள், தங்களுடைய தங்கையின் குழந்தைகளுக்கு, மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பழ வகை தட்டுக்கள், முந்திரி, பிஸ்தா, பாதாம் உள்ளிட்ட பொருட்களுக்கான தட்டுகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்கள் மற்றும் ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் என 1,130 பொருட்களை 5 டிராக்டர்களில் கொண்டு வந்திருந்தார்கள்.

50 பவுன் தங்கம், 22 லட்சம் ரொக்கம்

இது தவிர 2 கிடாய்கள், குழந்தைகளுக்கு 50 பவுன் நகைகள், ரூ.500 நோட்டுகளுடன் கூடிய பணமாலை, ரூ.200 நோட்டுகளுடன் கூடிய பணமாலையையும் கொண்டு வந்தார்கள். இந்த பணமாலைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. மேலும் ரூ.22 லட்சம் ரொக்கத்தை மொய்யாகவும் வழங்கியிருக்கிறார்கள்.

சாரட் வண்டியில் பவனி

குழந்தைகள் ஆதேஷ் விக்ரம், சாய்ஸ்ரீ ஆகிய இருவரையும் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் 3 மணி நேரமாக அந்த பகுதி வீதிகளில் சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக அழைத்து வந்துள்ளார்கள். அத்துடன் வண்டியின் முன்பு கேரள செண்டை மேளம், வாடிப்பட்டி உருமி மேளம், நாக்பூர் டோல் மேளம் முழங்கின. பட்டாசுகளின் வாணவேடிக்கையும் முத்துப்பட்டி கிராமத்தையே மிரள வைத்தது.

தாய்மாமன்கள் பேட்டி

இந்த தடபுடல் சீர்வரிசை ஊர்வலம் குறித்து குழந்தைகளின் தாய்மாமன்கள் கூறுகையில், "தாய்க்கு இணையானது தாய்மாமன் உறவு. கிழக்கு சீமையிலே படத்தில் வரும் தாய்மாமன் பாட்டை கேட்டவுடன் எங்களுக்கு கண்ணீர்தான் வரும். எனவேதான் சுமார் ரூ.2 கோடி செலவு செய்து தாய்மாமனின் முக்கியத்துவத்தை அனைவரும் அறியும் வண்ணம் இந்த ஊர்வலத்தை நடத்தியிருக்கிறோம். நம் பாரம்பரியத்தை மக்கள் தெரியும் வண்ணம் இந்த விழாவை நடத்தி உள்ளோம்" என்றார்கள். ஆசிரியை ரம்யா கூறும்போது, "என் அண்ணன்கள் ஊரே வியக்கும் வண்ணம் சீர்வரிசை கொண்டு வந்ததை நினைத்து நெகிழ்ந்துவிட்டேன்" என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+