குழந்தையின் பிறப்பு சான்றிதழை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி.. மதுரை மாநகராட்சி அறிவிப்பு
மதுரை: குழந்தையின் பிறப்பு சான்றிதழை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியை மதுரை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது. இதன்படி, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது விவரங்களை தாங்களே பதிவு செய்து தாய் சேய் நல அடையாள எண் பெற்றுக் கொள்ள முடியும்.
இது குறித்து மதுரை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "அனைத்து தாய்மார்களுக்கும் பேறுகாலத்தில் தாய் சேய் ஒருங்கிணைந்த கண்காணிப்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி பெற 12 இலக்க தாய் சேய் நல அடையாள எண் (RCH ID) (கர்ப்ப பதிவுஎண்) வழங்கப்படுகிறது.

கர்ப்பமான பெண்கள் 133xxxxxxxxx என தொடங்கும் 12 இலக்கு கொண்ட நிரந்தர கர்ப்பப்பதிவு எண் (Reproductive and Child Health Identification Number RCH ID) PICME இணையதளத்தின் மூலம் தேவைப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களை இணைய முகவரியில் https://picme3.tn.gov.in/ சமர்ப்பித்து பெறலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்: கர்ப்பிணியின் ஆதார் அட்டை 50 கே.பி.க்கும் (50 KB image file) குறைவான படக்கோப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும். குடியிருப்பு ஆதாரம் 50 கே.பி.க்கும் குறைவான படக்கோப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும். மருத்துவரால் கர்ப்பத்தை உறுதி செய்து (சிறுநீர் பரிசோதனை, ரத்தபரிசோதனை, அல்ட்ராசவுண்ட்) மருத்துவமனையில் மருத்துவரின் முத்திரையுடன் கையொப்பமிட்ட அறிக்கையை 50 கே.பி.க்கும் குறைவான படக்கோப்பை பதிவேற்றம் செய்யவேண்டும்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள் மேற்கண்ட முழு விவரங்களை பி.ஐ.சி.எம்.இ.(PICME) இணையதளத்தில் தாங்களே பதிவு செய்து கர்ப்ப பதிவெண், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் மகப்பேறு நிதியுதவி பெறுவதற்கு பயன்படுத்தலாம்" இவ்வாறு துரை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழ் வாங்குவது எப்படி: நகராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழ் பதிவுப் படிவத்தைப் பெறுங்கள். குழந்தை மருத்துவமனையில் பிறக்கும் போது, குழந்தைக்கு என்று அடையாள எண் வழங்கப்படும். அதை வைத்து சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழ் படிவத்தை நிரப்பி தர வேண்டும். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்யப்படாவிட்டால், காவல்துறை சரிபார்த்த பிறகு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
பிறப்பு பதிவுகளின் சரிபார்ப்பு என்பது (தேதி, நேரம், பிறந்த இடம், பெற்றோரின் அடையாளச் சான்று, முதியோர் இல்லம் போன்றவை) சரிபாரக்கப்பட்ட பின்னர், விண்ணப்பதாரருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
பிறப்புச் சான்றிதழ் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதற்கு, பள்ளிகள் மற்றும் அரசுப் பணியில் சேருவதற்கு, அடையாள ஆவணமாக பயன்படுத்துவதற்கு, பான் கார்டு வாங்க, ஆதார் கார்டு வாங்க, பாஸ்போர்ட் பெற, திருமண உரிமை கோருவதற்கு என பல்வேறு விஷயங்களுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் ஆகும்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications