ஜெயலலிதா இருந்தா இப்படி ஆகிருக்குமா? அதிமுக மதுரை கூட்டத்தில் ஷாக் சம்பவம்! எடப்பாடி அதிர்ச்சி?
மதுரை: நேற்று அதிமுக சார்பாக நடந்த மதுரை பொதுக்கூட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்ததில் இருந்தே வரிசையாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. லோக்சபா தேர்தல் தோல்வி , இடைத்தேர்தல் தோல்விகள், சட்டசபை தோல்வி, உள்ளாட்சி, நகராட்சி தோல்வி என்று வரிசையாக தோல்விகளை சந்தித்தது.

கட்சியின் தோல்விக்கு இரட்டை தலைமையும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினார். அவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனபின் மிகப்பெரிய மாநாட்டை முதல் கட்டமாக மதுரையில் நடத்தி உள்ளார்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின் அதிமுகவில் நடக்கும் மிகப்பெரிய மாநாடு இது. எடப்பாடி பழனிசாமிக்கு கீழ் நடக்கும் முதல் மிகப்பெரிய மாநில மாநாடு இது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
சென்னை, கொங்கு, தென் மண்டலங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த நிகழ்ச்சிக்கு வந்தனர். இந்த எழுச்சி மாநாடு காரணமாக அதிமுக புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றுதான் கூற வேண்டும்.நேற்று காலை 8 மணிக்கு கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அங்கே 51 ஆண்டுகளை குறிக்கும் வகையில் 51 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. இதை ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி. ஹெலிகாப்டரில் மலர் தூவ கொடி கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றினார்.
மிஸ்ஸிங்: ஆனால் இந்த நேற்று அதிமுக சார்பாக நடந்த மதுரை பொதுக்கூட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் பெண்கள் சொற்ப அளவிலேயே கலந்து கொண்டனர். 10 ஆயிரம் பேருக்கும் குறைவாகவே பெண்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் பெண்கள் அதிகம் இருப்பார்கள். ஜெயலலிதா செல்லும் இடமெல்லாம் பெண்கள் இருப்பார்கள். கட்சி பொதுக்கூட்டங்களில் பாதிக்கு பாதி பெண்கள் கூட்டம் இருக்கும். ஜெயலலிதாவிற்கு என்று பெண்கள் பிரபலம் அதிகம் இருந்தது. பெண்களை வைத்தே பல முறை ஜெயலலிதா போராட்டங்களை மேற்கொண்டு இருக்கிறார். பெண்கள் வாக்குகளும் அதிமுகவிற்கு தேர்தல் நேரத்தில் பெரிய அளவில் உதவியது.

ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் பெண்கள் பெரிதாக கலந்து கொள்ளவில்லை. எடப்பாடிக்கு பெண்கள் ஆதரவே இல்லை அல்லது குறைவாக உள்ளது என்பதை வெளிப்படையாக நேற்று நடந்த கூட்டம் காட்டியது. கிட்டத்தட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய வார்னிங்காக இந்த கூட்டம் பார்க்கப்படுகிறது. அதிமுகவிற்கு இந்த பொதுக்கூட்டம் புத்துணர்வை ஏற்படுத்தி இருந்தாலும் பெண்கள் கூட்டம் இல்லாதது கட்சிக்கு கெட்ட செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின் நடந்த முதல் பெரிய பொதுக்கூட்டம் இது. மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்த கூட்டம் நடந்தது. கிட்டத்தட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்தி உள்ளார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications