மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி நத்தம் பார்த்திபன் முதலிடம்.. துளசிராம் 2ம் இடம்!
மதுரை : மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நிறைவு பெற்றது. இதில் 14 காளைகளை அடக்கிய நத்தம் பார்த்திபன் முதலிடம் பிடித்தார். 12 காளைகளை அடக்கிய மஞ்சம்பட்டி துளசிராம் 2ம் இடம் பிடித்தார். இவர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவது தைப் பொங்கல் பண்டிகைகள் கடந்த 13ம் தேதி தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கல் பண்டிகையான இன்று மாடுகளுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து கொண்டாடப்படுகிறது. அதேபோல் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி பொங்கல் திருநாளன்று (நேற்று) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 1100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி முதலிடம் பிடித்தார். 15 காளைகளை அடக்கிய குன்னத்தூர் அரவிந்த் திவாகர் இரண்டாமிடம் பிடித்தார். 13 காளைகளை அடக்கி திருப்புவனம் முரளிதரன் மூன்றாம் இடம் பிடித்தார். சிறந்த காளைக்கான முதல் பரிசினை விகே சசிகலாவின் மாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனிடையே நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன் காளை நெஞ்சில் முட்டியதில் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த நிலையில் இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மஞ்சமலை ஆற்றில் அமைந்துள்ள வாடிவாசல் பகுதியில் மகாலிங்க சாமி மடத்து கமிட்டி மற்றும் பாலமேடு பேரூராட்சி சார்பாக ஜல்லிக்கட்டு நடந்தது. இந்தப் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரம் காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் களம் இறங்கினர். சுமார் 2400 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதலில் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதன்பின்னர் தான் போட்டி தொடங்கியது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதன்பின்னர் அடுத்தடுத்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

பாலமேடு ஜல்லிக்கட்டு மாலை 5.45 மணிக்கு முடிவுக்கு வந்தது. இறுதி சுற்று முடிவில் 14 காளைகளை அடக்கி நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்ற வீரர் முதலிடம் பிடித்தார். மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசி என்ற வீரர் 12 காளைகளை அடக்கி 2வது இடம் பிடித்தார். பொதும்புவை சேர்ந்த பிரபா 11 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்தார்.
இதில் அதிக மாடுகளை பிடித்து வென்ற நத்தம் பார்த்தீபன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி வழங்கும் கார் பரிசாக கிடைக்கிறது. 2வது இடம் பிடித்த மஞ்சம்பட்டி துளசிராமுக்கு பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோல் சிறந்த காளையின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் வழங்கும் டிராக்டர் மற்றும் 2வது பரிசாக சிறந்த காளையின் உரிமையாளருக்கு நாட்டின பசு மற்றும் கன்று வழங்கப்பட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications