அரசியலில் கமலும் ரஜினியும் இணைவார்களா? ஸ்ருதிஹாசன் அளித்த பதில் இதுதான்!
Recommended Video
மதுரை: அரசியலில் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைவார்களா என்ற கேள்விக்கு அது குறித்து தனக்கு தெரியாது என ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியதுமே தேர்தலை சந்தித்து கணிசமான வாக்குகளை பெற்றவர் கமல்ஹாசன். இந்த நிலையில் ரஜினிகாந்தும் இந்த ஆண்டு கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினியும் கமலும் திரைத்துறையில் சேர்ந்து பயணித்தது போல் அரசியலிலும் பயணிக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் விருப்பம். தேவைப்பட்டால் இணைவோம் என இருவருமே தெரிவித்துவிட்டனர்.

அரசியல் தெரியாது
இந்தநிலையில் மதுரையில் நகைக் கடை திறப்பு விழாவில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அரசியல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

கடும் உழைப்பாளி
அரசியலில் ஆர்வமும் இல்லை. என்னுடைய ஆதரவு என் அப்பாவுக்குத்தான். கலைத்துறையில் எனக்கு நிகர் நானே. என் தந்தையை போல் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. கமல்ஹாசன் சிறுவயதிலிருந்தே கடும் உழைப்பாளி.

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
அரசியல் அவருக்கு புதிதல்ல. அவர் அந்த களத்தில் சாதிப்பாரா இல்லையா என கூறுவதற்கு நான் ஜோதிடர் கிடையாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சொல்ல முடியாது
ரஜினியும் கமலும் அரசியலில் இணைவது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் ஆகும். அது குறித்து நான் எதுவும் சொல்லமுடியாது என்றார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications