இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டார்... மதுரையில் கமலுக்கு எதிராக போராட்டம்
மதுரை: இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து, மதுரையில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை என்று சர்ச்சை பேச்சுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை; ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும் என்றார். மேலும், உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால் கசப்பு மருந்தாகும் என்றும் பேசினார்.
எந்த மதத்தையும் நான் சுதந்திரமாக விமர்சிப்பேன் என்று கூறிய கமல்ஹாசன், என் மீது கோபம் கொள்பவர்கள் ஹேராம் படத்தை பாருங்கள் என்றும் விளக்கமளித்தார்.
இந்தநிலையில், இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து, பழங்காநத்ததில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் காவி கொடிகளை ஏந்தியபடி, கமல்ஹாசனுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications