சீனா நமது எதிரி நாடுனு இதுவரை யாருமே அறிவிக்கவில்லையே.. பிரதமருக்கு கனிமொழி பதில்
மதுரை: சீனா நமது எதிரி நாடு என இதுவரை யாரும் அறிவிக்கவில்லையே என திமுக எம்பி கனிமொழி பதில் அளித்துள்ளார். திமுக கொடுத்த விளம்பரத்தில் சீன நாட்டு ராக்கெட் இடம்பெற்றுள்ளதாகவும் இதுதான் திமுகவின் நாட்டுப் பற்று என்றும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்தார். அதற்கு கனிமொழி இவ்வாறு பதில் அளித்தார்.
தூத்துக்குடி, நெல்லை ஆகிய இரு மாவட்டங்களுக்கு இருநாட்கள் பயணமாக பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். நேற்றைய தினம் திருப்பூரில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவை முடித்துக் கொண்டு அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து அவர் இன்று காலை மதுரை விமான நிலையத்தில் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு சென்றார். அங்கு குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்த விழாவில் திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கான அழைப்பிதழில் கனிமொழியின் பெயர் இல்லை., அது போல் அந்த மாவட்டத்தை சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணனின் பெயரும் விடுபட்டே இருந்தது. அதே தூத்துக்குடியை சேர்ந்த அமைச்சர் கீதாஜீவனின் பெயர் இருந்தது.
திட்டமிட்டே கனிமொழியின் பெயர் புறக்கணிக்கப்பட்டதா என தெரியவில்லை. இந்த வினாவுக்கே விடைத் தெரியாமல் இருந்த நிலையில் இந்த இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது மேடையில் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோரின் பெயர்களை கூறினார். ஆனால் கனிமொழி எம்பி பெயரையும், தமிழக அமைச்சர் எ.வ.வேலு பெயரையும் மட்டும் சொல்லாமல் நேரடியாக பேச்சை தொடர்ந்தார்.
இது திமுகவினருக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து கனிமொழி எம்பி செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியிருப்பதாவது: குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. இது திமுக அரசுக்கு கிடைத்த வெற்றி. பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது தொடங்கியதுதான் இந்த குலசேகரப்பட்டினம் திட்டம்.
முதல்வராக கருணாநிதி வந்த போதும் இந்த திட்டத்தை உடனே கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்காக நிலத்தை சீக்கிரம் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினும் துரிதப்படுத்தியதால்தான் இந்த திட்டம் தற்போது சாத்தியமாகியுள்ளது.
மேலும் தற்போது நடந்து முடிந்த பட்ஜெட்டிலும் கூட இந்த ஏவுதளத்திற்காக 2000 ஏக்கரை ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. இப்படி குலசேகரபட்டினம் திட்டம் கொண்டு வர திமுக பல முயற்சிகளை கொண்டு வந்துள்ளது. இது எங்கள் தலைவர் கருணாநிதியின் திட்டம் என்பதால்தான் நானும் எ.வ.வேலுவும் சென்றோம். ஆனால் பிரதமருக்கு என் பெயரை சொல்லக் கூட மனமில்லை. அவர்களுக்கு தெரிந்த நாகரீகம் அவ்வளவுதான். இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.
சீன கொடிக்கு கனிமொழி பதில்: குலசேகரபட்டினம் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவுக்காக திமுக சார்பில் வெளியான விளம்பரத்தில் சீன கொடி இருப்பதாக பிரதமர் குற்றம்சாட்டினாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன என கனிமொழியிடம் நிருபர் கேட்டார். அதற்கு அவர் யாரோ வடிவமைப்பு செய்தவர், அப்படிப்பட்ட ராக்கெட் சின்னத்தை போட்டிருக்கிறார். சீன அதிபர் தமிழகம் வந்த போது அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
இருவரும் மகாபலிபுரத்தில் வாக்கிங்கெல்லாம் போனார்கள். அப்படியிருக்கும் சூழலில் அதை எதிரி நாடு என இதுவரை யாரும் அறிவிக்கவில்லை என கனிமொழி பதில் அளித்தார்.
என்ன பிரச்சினை: இந்த ராக்கெட் ஏவுதளம் என்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு என்கிறார்கள். இது தற்போது நனவாவதால் திமுக அரசை வாழ்த்தி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு விளம்பரத்தை செய்தித் தாள்களுக்கு கொடுத்தார்.
அந்த விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடி , முதல்வர் ஸ்டாலினின் படங்கள் பெரியதாகவும் கனிமொழி, உதயநிதியின் படங்கள் சிறியதாகவும் வைக்கப்பட்டுள்ளன. அந்த படங்களுக்கு பின்புலத்தில் ராக்கெட் ஏவுவது போல் ஒரு படம் இருக்கிறது. அங்கு நிறைய ராக்கெட்டுகள் உள்ள நிலையில் சிவப்பு நிறத்தில் ஸ்டார் குறியீடுகளுடன் ஒரு ராக்கெட் இடம்பெற்றுள்ளது. இது சீன நாட்டு கொடியை போன்றே இருப்பதால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இந்தியா ராக்கெட் துறையில் அசுர வளர்ச்சி பெற்று வரும் நிலையில் நம் நாட்டு விண்வெளி வீரர்களை அவமதிப்பது போல் சீன நாட்டின் ராக்கெட் போட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான 'டிஜிட்டல் தங்கம்'.. உலகையே கண்ட்ரோலில் எடுக்கும் சீனா.. அப்போ இந்தியா எங்கே? -
அமெரிக்க போர் கப்பல்கள் கண்ணில் மண்ணை தூவிய சீனா.. அசால்டாக ஹார்முஸை கடந்து பயணம்! அது எப்படி -
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா செய்யும் சதி.. சுதாரித்துக்கொண்ட ஜி ஜின்பிங்.. ஈரான் தான் மையப்புள்ளி! -
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா! -
ஈரான் - அமெரிக்கா மோதல்.. சீனுக்குள் வரும் சீனா! 4 அம்ச திட்டம்.. ஜி ஜின்பிங் போடும் பலே பிளான்? -
டிரம்பிடம் பணிந்த சீனா? ஹார்முஸில் அமெரிக்க கடற்படை செய்த மெகா சம்பவம்! ஜலசந்தியில் பதற்றம்! -
ஸ்கெட்ச் ஈரானுக்கு இல்ல, சீனாவுக்கு.. அமெரிக்காவின் Blockade-க்கு பின்னால் தந்திரமான திட்டம்.. முறியடிக்கும் ஜி ஜின்பிங் -
பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications