அண்ணாமலையை ‘ரவுண்ட் அப்’ செய்யும் திமுக.. நானும் வழக்கு தொடர்வேன்.. கனிமொழி பரபர பேட்டி!
மதுரை : திமுகவினரின் சொத்துப் பட்டியல் என அண்ணாமலை வெளியிட்ட லிஸ்ட் தொடர்பாக அண்ணாமலைக்கு ஏற்கனவே திமுக சார்பிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், நானும் வழக்கு தொடர்வேன், அதற்கு அண்ணாமலை பதிலளிக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார்.

அப்போது, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம் பெற்றதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். உடனடியாக பிரஸ் மீட்டைக் கூட்டிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவதூறாக குற்றம்சாட்டிய அண்ணாமலை மீது வழக்கு தொடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில், "திமுக மீது ஆதாரமற்ற வகையில் குற்றம்சுமத்தி சொத்து பட்டியல் வெளியிட்டது தொடர்பாக அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், ரூ.500 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகவும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி, தானும் அண்ணாமலைக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்ட DMK Files சொத்து பட்டியலில் கனிமொழி எம்.பிக்கு ரூ.830 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி கனிமொழி, சொத்துப் பட்டியல் தொடர்பாக அண்ணாமலைக்கு ஏற்கனவே திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், நானும் வழக்கு தொடர்வேன், அதற்கு அண்ணாமலை பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications