மதுரை பஸ் ஸ்டாண்டில் திருதிருனு விழித்த 2 பெண்கள்.. கன்னியாகுமரி அஜித் குமார் கேவலம்.. தகித்த தக்கலை
மதுரை: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம்தான் இன்றுவரை துணையாக இருந்து வருகிறது. அந்தவகையில், எத்தனையோ வழக்கறிஞர்கள், பெண்களின் நலனுக்காக நீதி கிடைக்க பாடுபட்டு வருகிறார்கள். ஆனால், கன்னியாகுமரியில் அஜித்குமார் என்ற வழக்கறிஞர் செய்த வேலையை பாருங்கள்.. இப்போது அஜித்குமார் போக்சோவில் கைதாகி உள்ளார். என்ன நடந்தது தக்கலையில்?
கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். திருமணமான இந்த பெண், தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 14 மற்றும் 12 வயதுடைய மகள்கள் இருக்கிறார்கள். 2 பெண் குழந்தைகளும், அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு, 6ம் வகுப்பு பயின்று வருகிறார்கள்.

பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக, ரப்பர் தோட்டத்தில் கூலித்தொழிலாளியாக இளம்பெண் வேலை பார்த்து வருகிறார்.. இந்த ரப்பர் தோட்டத்தில் , சில சமயங்களில் நைட் டியூட்டியும் வந்துவிடுவார்.
ஊரை சுற்றி பார்க்க ஆசை
அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் நைட் ஷிப்ட் பணிக்கு சென்றுள்ளார்.. அப்போது 2 பெண் குழந்தைகளும், இரவில் ஊர் சுற்றி பார்ப்பதற்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார்கள்.
பிறகு திடீரென தங்களது வீட்டுக்கு செல்வதற்கு வழி தெரியாமல் விழித்துள்ளனர். அதனால், ஒவ்வொரு தெருவாக சுற்றித்திரிந்துள்ளனர்.. அப்படியே தக்கலை பஸ் ஸ்டாண்டிற்கும் வந்துவிட்டார்கள். அங்கிருந்து எப்படி போவது என்று தெரியாமல் விழித்துள்ளனர்.. அப்போது நள்ளிரவு 12 மணி ஆகிவிட்டது. அந்த நேரத்தில், அந்த வழியாக வழக்கறிஞர் அஜித்குமார் என்பவர் சென்றுள்ளார்..
வழக்கறிஞர் அஜித்குமார்
2 சிறுமிகளும் விழிப்பதை கண்ட வழக்கறிஞர் அஜித்குமார், நைசாக பேச்சு தந்துள்ளார்.. பிறகு, தன்னுடைய அலுவலகத்திற்கும் அழைத்து சென்றுள்ளார்.. இதில், 12 வயது சிறுமியை தனி ரூமில் அடைத்துவிட்டு, 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல், 2 சிறுமிகளையும், மறுபடியும் தக்கலை பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்து சென்று, மதுரை செல்லும் பஸ்ஸில் ஏற்றியுள்ளார்.. அப்போது, நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி அனுப்பி வைத்துள்ளார் அஜித்குமார்... இதனிடையே தன்னுடைய 2 மகள்களையும் காணாமல், பெற்ற தாய் பதறிப்போய்விட்டார்.. மறுநாள் காலையில் இதுதொடர்பாக போலீசில் புகார் தந்தார்..
டீ கடையில் சிறுமிகள்
இந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சுங்கான்கடை பகுதியில் சிறுமிகள் 2 பேரும் இளைஞர் ஒருவருடன் பைக்கில் இருந்து இறங்கி, டீ குடித்துவிட்டு, மறுபடியும் பைக்கில் ஏறி செல்வது பதிவாகியிருந்தது.
அந்த இளைஞர் பெயர் அஜித்குமார் என்பதும், வழக்கறிஞர் என்பதும் தெரியவந்தது.. இதையடுத்து, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர் அஜித்குமாரையும் கைது செய்தனர்..
ஸ்மார்ட் போன்கள்
பிறகு சிறுமிகளை தேட துவங்கினார்கள்.. இந்த 2 சிறுமிகள் கையில் ஸ்மார்ட்போனை வைத்திருக்கிறார்களாம். அதனால், செல்போன் டவரை வைத்து சிக்னல் கண்காணிக்கப்பட்டது. ஆனால், இரவு நேரத்தில் சிறுமிகளின் செல்போன் சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது. தக்கலையிலிருந்து மதுரை பஸ் ஸ்டாண்டில் சிறுமிகள் இறங்கியதுமே, அங்கு செல்போனுக்கு சார்ஜ் ஏற்றிவிட்டு, செல்போனையும் ஆன் செய்துள்ளனர்.
அப்போதுதான், செல்போன் சிக்னல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமிகளை மீட்ட காவல்துறையினர், பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு, இந்த வழக்கை மார்த்தாண்டம் மகளிர் ஸ்டேஷனுக்கு மாற்றினார்கள்.. இதையடுத்து மார்த்தாண்டம் மகளிர் போலீசார் வழக்கறிஞர் அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications