பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப காங்கிரஸ் உடன் கை கோர்க்கும் திருமாவளவன்..கர்நாடக தேர்தலில் பிரச்சாரம்
மதுரை: கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்துவது, தென் மாநிலங்களின் நலன்களுக்கு இன்றியமையாத தேவையாக உள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் மக்கள் அந்த முடிவில் இருக்கிறார்கள் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பாஜகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான களத்தில் காங்கிரசோடு விடுதலை சிறுத்தைகள் கைகோர்ப்பதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சார களத்தில் அனல் பறக்கிறது. தமிழகத்தில் இருந்தும் அரசியல் கட்சித்தலைவர்கள் கர்நாடகாவிற்கு சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,
கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியின் வெற்றியை இலக்காக வைத்து அங்குள்ள தமிழர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாக்கு சேகரிக்க இருக்கிறேன் என்று கூறினார்.

தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவை மையமாக வைத்து பாஜக, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மதத்தின் அடிப்படையில் வெறுப்பு அரசியலை விதைத்து வருகிறது. அதை அவர்கள் ஒரு களமாக பயன்படுத்துகின்றனர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்துவது, தென் மாநிலங்களின் நலன்களுக்கு இன்றியமையாத தேவையாக உள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் மக்கள் அந்த முடிவில் இருக்கிறார்கள். என்றாலும், பாஜகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான களத்தில் காங்கிரசோடு விடுதலை சிறுத்தைகள் கைகோர்க்கிறது.
கர்நாடகத்தில் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து, அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அவர் இருக்கும்போதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என இடைமறித்து அதை நிறுத்தியுள்ளனர். கன்னட வாழ்த்து பாடலை பாடச் சொல்வது அவர்களுக்கான உரிமை. ஆனால் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய ஒரு பகுதியில், ஒட்டுமொத்த தமிழ் வாக்காளர்களையும் அவமதிக்கக்கூடிய வகையில் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

திருக்குறளை பேசுவது, பாரதியார் பாடலை பாடுவது, அவ்வப்போது தமிழை இடையே எழுதி வைத்து இந்தியில் படிப்பது இவையெல்லாம் பாஜக கையாளக்கூடிய தேர்தல் தந்திரங்களில் ஒன்று. இந்தியை திணிக்க வேண்டும், சமஸ்கிருதத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்கு. அதில் ஒரு முயற்சி தான், பிரதமர் மோடியின் 100வது மன்கிபாத் நிகழ்ச்சியில் கலைஞர் எழுதிய செம்மொழி பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதுவும், அவர்களின் தேர்தல் யுக்திகளில் ஒன்று என்றும் தெரிவித்தார் திருமாவளவன்.
தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை செய்யப்பட்டது, வேதனை அளிக்கக் கூடிய சம்பவம். மணல் மாபியா கும்பல் அவரை கொடூரமாக தாக்கிப்படுகொலை செய்திருக்கிறார்கள். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மணல் மாபியா கும்பல் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்கு அரசு, சிறப்பு படை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தானியங்கி எந்திரத்தின் மூலம் மது விற்பனை செய்யும், ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வசதியை ஏற்படுத்தித் தருவதில் எந்த நியாயமும் இல்லை. படிப்படியாக மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு உள்ள இயக்கம் தி.மு.க. என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில், தேர்தல் வாக்குறுதியிலேயே அதை கூறி இருக்கிறார். எனவே படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு முதல்வர் முன்வர வேண்டுமே தவிர, தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுவை பெற வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஏற்புடையதல்ல என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications