திருப்பரங்குன்றம் பிரச்சனையை எதற்காக கிளப்புகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.. முதல்வர் ஸ்டாலின்
மதுரை: திருப்பரங்குன்றம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், சில கட்சிகளுக்கு எப்போதும் கலவர சிந்தனைதான் இருக்கிறது என்றும், பிரிவினையை தூண்டி சமூகத்தை துண்டாடும் செயல்கள் உண்மையான ஆன்மிகம் அல்ல என்றும் ஸ்டாலின் கூறினார்.
தமிழக முதலவர் ஸ்டாலின் இன்று மதுரையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார். தொடர்ந்து இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

வயிற்றெரிச்சலிலும், ஆற்றாமையினாலும், சிலர் ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள். நாம வளர்ச்சி அரசியலை பேசினால், அவங்க வேறு அரசியலை பேசுகிறார்கள். நான் உறுதியாக சொல்கிறேன். நீங்க என்ன அரசியல் சூழ்ச்சிகளை செய்தாலும், அது அத்தனையையும் நாங்க முறியடிப்போம். இந்த முத்துவேல் கருணாநிதியிடம் உங்க பாச்சா பலிக்காது.
சமீபத்தில் நான் ஒரு ட்வீட் போட்டிருப்பேன். அதில் மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல்.. அதனை நிரூபிக்கும் வகையில், இன்று 31,660 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 56914 பேருக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்துவிட்டு தான் இங்க வந்திருக்கிறேன். இது தான் எங்க அரசியல். மதுரையையும், அதனை சுற்றியிருக்கிற பகுதியையும் தரமான உலக தரத்தில் உருவாக வேண்டும் என இந்த அரசு நினைக்கிறது.
நம்ம ஆட்சிக்கு வந்ததும், கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என்று சொன்னோம். அதை செயல்படுத்தினோம். ஆனால் அதே 10 வருஷத்திற்கு முன்னாடி எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்போம் என்று சொன்னாங்களே.. இப்போது வரை செய்தார்களா?.. ஏறு தழுவுதல் அரங்கம் அமைத்திருக்கிறோம். சொன்னோம் இப்போது செய்துவிட்டோம். ஆனால் பாஜகவோ, கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை நிறுத்த பார்த்தார்கள். என்று கூறினார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications