கரூரில் புறம்போக்கு நிலத்துக்கு பட்டா.. வனநிலமாக மாற்றணுமா? இதுக்கு பேர்தான் பொதுநலன்? மதுரை நீதிபதி
மதுரை: பட்டா நிலத்தை வனநிலமாக மாற்ற சட்ட நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்திய வழக்கு ஒன்றில் உயர்நீதி மன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது. குளித்தலை அருகே உள்ள நிலம் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பட்டா என்பது சொத்தின் உரிமையை நிறுவும் சட்ட ஆவணமாகும்.. இந்த பட்டாவில் பட்டா எண், மாவட்டம், தாலுக்கா, கிராமம், உரிமையாளர் பெயர், சர்வே எண், நிலத்தின் பரப்பளவு, வரி விவரங்கள் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும்..

பட்டா நிலத்தை விற்க முடியும் என்றாலும், பட்டா உங்கள் பெயருக்கு மாற்றப்படாமல் இருந்தால், அதை விற்க முடியாது. பட்டாவில் நிபந்தனை இருந்தால், அந்தக் கால வரையறை முடியும் வரையும் நிலத்தை விற்க முடியாது.
பட்டா விற்பனை: அதேபோல, பட்டாவில் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தால், அந்த நிலத்தை குறிப்பிட்ட காலம் முடிவதற்கு முன்பு விற்க முடியாது.. ஏடி கண்டிஷன் பட்டாவில் உள்ள நிலத்தை குறிப்பிட்ட காலத்திற்கு யாருக்கும் விற்க முடியாது.. இப்படி பட்டா விற்பனையில் எத்தனையோ நடைமுறைகள் உள்ளன.
இந்நிலையில், பட்டா நிலத்தை வனநிலமாக மாற்றக்கோரி பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதை மதுரை ஹைகோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது.. அத்துடன், சட்ட நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தியதற்காக மனுதாரருக்கு, 10,000 ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது நீதிமன்றம். என்ன நடந்தது?
மதுரை ஹைகோர்ட்: கரூர் மாவட்டம் பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த ஆண்டியப்பன் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.. அந்த மனுவில், "குளித்தலை அருகே கல்லடை கிராமத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் கல்லாங்குத்து புறம்போக்கு நிலம் உள்ளது. அதை வனப்பகுதியாக மாற்றி, பாசன கண்மாய்க்கு தண்ணீர் செல்வதற்கான வசதியை ஏற்படுத்துவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.. பிறகு வழக்கு குறித்து கூறும்போது, "மனுதாரர் குறிப்பிடும் நிலத்திற்கு ஒருவருக்கு சாதகமாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதை மனுதாரர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில், மனு தாக்கல் செய்து, நிவாரணம் கோருவது எப்படி என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் பொதுநலன் இல்லை.
அபராதம்: எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கிறோம்.. அதை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்த வேண்டும்" என்று கூறி உத்தரவிட்டனர். சட்ட நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தியதற்காக நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவும், அபராதமும் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications