விஜய்யின் கூட்டத்தில் யாராவது இறப்பது நல்ல சகுனம்தானே.. மீண்டும் பரபரப்பை கிளப்பிய நயினார் நாகேந்திரன்
மதுரை: கரூர் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய்யும் காரணம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்யின் அனைத்து கூட்டத்திலும் யாராவது உயிரிழப்பது அவர்களுக்கு நல்ல சகுனம் தான்.. 12 மணிக்கு வர சொல்லியிருந்தாங்க.. ஆனால் இவங்க 7 மணிக்கு வருகிறார்கள். கூட்டத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்க மாட்டேங்கிறாங்க.." என்றார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யை திரிஷாவை வைத்து விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் ஒருமுறை தான் பதில் சொல்ல முடியும் என கூறிவிட்டு சென்றார்.

இந்த நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் யார் மனதையும் புண்படுத்தும்படி பேசுபவன் நான் கிடையாது.. அவ்வளவு தான் சொல்ல முடியும். என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் கரூர் சம்பவத்திற்கு விஜய்யும் காரணம் என கூறினார்.
அவர் கூறுகையில், "கரூர் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்து போனார்கள். இதற்கு தமிழக அரசும் காரணம்.. விஜய்யும் காரணம்.. 12 மணிக்கு வர சொல்லியிருந்தாங்க.. ஆனால் இவங்க 7 மணிக்கு வருகிறார்கள். கூட்டத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. இதே மாதிரி சேலம் கூட்டத்தில் கூட ஒருவர் உயிரிழந்துவிட்டார். விஜய்யின் அனைத்து கூட்டத்திலும் யாராவது உயிரிழப்பது அவர்களுக்கு நல்ல சகுனம் தானே.." என்றார்.
தொடர்ந்து பாஜகவை விஜய் சமீப நாட்களாக விமர்சிப்பதை தவிர்த்து இருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், நானும் திட்டிட்டு தான் இருக்கேன்.. அவர்களும் திட்டிட்டு தான் இருக்காங்க.. விஜய்க்கு எந்த கொள்கையும் கிடையாது. கொள்கை எதிரி என்று சொல்வார்கள் ஆனால் கொள்கை என்ன என்றே தெரியாது" என்றார்.
-
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்!












Click it and Unblock the Notifications