கரூர் விவகாரம்.. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்.. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்!
மதுரை: கரூர் துயர சம்பவத்தை சிபிஐ விசாரிக்க கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் சிபிஐ விசாரணை கோரிய அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், கரூர் விவகாரம் தொடர்பான விசாரணையை தொடக்க நிலையிலேயே, அதனை சிபிஐக்கு மாற்றும்படி எப்படிகேட்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி எம்எல் ரவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜோதிராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஒரு வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு, அதில் திருப்தி ஏற்படவில்லை என்றால், சிபிஐ விசாரணைக்கு மாற்றும்படி கோரலாம். ஆனால் தொடக்க நிலையிலேயே விசாரணையை சிபிஐக்கு மாற்றும்படி எப்படி கேட்க முடியும்?
அதேபோல் எம்எல் ரவி ஒரு அரசியல்வாதி. அவர் பாதிக்கப்பட்டவர் அல்ல.. சிபிஐ விசாரணை கோர பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில்லாத மனுதாரருக்கு என்ன தகுதியுள்ளது? உங்களுக்கும், இந்த சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம்? நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம். அதேபோல் கரூர் விவகாரம் தொடக்க நிலையில் இருப்பதால், மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது.
இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உகந்ததல்ல. கரூரில் உயிரிழந்த குடும்பங்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.. யாராவது எண்ணி பார்த்தீர்களா? சிபிஐ விசாரணை கோரி மனுதாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை என்றும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்எல் ரவியின் பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதேபோல் சிபிஐ விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் ஜிஎஸ் மணி உள்ளிட்டோர் தொடர்ந்த அத்தனை மனுக்களும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால் தமிழக அரசு சார்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணை அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே!












Click it and Unblock the Notifications