"அந்த காணொளியை பார்த்து நானும் வருத்தப்பட்டேன்".. சூர்யா கீழடி சர்ச்சை குறித்து சினேகன் கருத்து
மதுரை: நடிகர் சூர்யா குடும்பம் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை சுற்றி பார்ப்பதற்காக பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் நீண்ட நேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் வீடியோவும் வெளியானது. இதுபற்றி பாடலாசிரியர் சினேகன் கூறுகையில், சூர்யா வேண்டுமென்றே இதை செய்திருக்க மாட்டார், தெரியாமல் இது நடந்திருக்க வேண்டும் என்றார்.
தமிழர்கள் நாகரீகத்தை பறைசாற்றும் கீழடி அருங்காட்சியம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.மதுரையை ஓட்டிய பகுதியில் அமைந்துள்ள கீழடியில் பண்டைய தமிழர்களின் வாழ்வியலை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கீழடிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வருகிறார்கள். மேலும் ஏராளமான திரைபிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் கீழடியை ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

வீடியோ
சில நாட்களுக்கு முன்பு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் குழந்தைகளுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். சூர்யாவின் குடும்பத்தினர் அருங்காட்சியகத்தின் உள்ளே இருந்த நேரத்தில், பொதுமக்கள், மாணவர்கள், வயதானவர்கள் என அனைவரும் நீண்ட நேரம் வெளியே காக்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் ஊடகங்களில் வெளியானது.

ஐஜியிடம் புகார்
இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், மதுரை பாஜக தலைவர் மகா சுசீந்திரன், வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிட்டோர் தென்மண்டல ஐஜியிடம் புகார் அளித்தனர். அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தாவது: "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி., வெங்கடேசன், நடிகர்கள் சூர்யா, சிவக்குமார், ஜோதிகா அவர்களது குடும்பத்தினரை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார்.

காக்க வைக்கப்பட்டனர்
காலை 10:00 மணிக்கு மேலாகியும் பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. பள்ளி மாணவர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பல மணி நேரம் கால் கடுக்க கடும் கோடை வெயிலில் நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அனைத்து விதிமுறைகளையும் மீறி அருங்காட்சியகத்திற்கு சென்று வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர்களை அனுமதி அளித்த அனைத்து ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தனர்.

பாராட்டுகிறேன்
இதுஒருபுறம் எனில், சர்ச்சைகளுக்கு பதில் அளித்த அமைச்சர் மாசுப்பிரமணியன், சூர்யாவாக இருந்தாலும்,அவரது தந்தை சிவக்குமாராக இருந்தாலும் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரியது. நேரடியாக வந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அவர்களின் உணர்வை பாராட்டுகிறேன். அந்த நேரத்திலே சின்ன சின்ன அசவுகரியங்கள் ஏற்பட்டிருக்கலாம், அதனை பெரிதுப்படுத்துவது சரியானது இல்லை என்றார்.

திமிரு தலைகேறி
இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "கீழடி அருங்காட்சியத்தை பார்ப்பதற்காக வந்துள்ளேன். நம் பெருமைகளையும் தரவுகளையும் மிகவும் அழகாக பராமரித்து உள்ளார்கள் இந்த இடத்தை விட்டு வெளியே செல்வதற்கு எனக்கு மனமில்லை. வரலாற்று புகைப்படங்கள், அதன் வழிமுறைகளை கேட்கும்பொழுது இன்னும் சற்று தமிழ் திமிரு தலைக்கேறி நிற்கிறது, பெருமையாக உள்ளது. இந்த மண்ணுக்கு துரோகமான செயலை இந்த மண்ணுக்குறியவர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

நம்பிக்கை உள்ளது
இந்த மண்ணுக்கு எந்த கெடுதல் நடந்தாலும் அதற்கு எதிராகதான் நாங்கள் நிற்போம். அதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு மக்கள் நீதிமையத்திற்கு இருக்கிறது. மக்கள் நீதி மைய்யத்தின் உறுப்பினராகவும் ஒரு கவிஞனாகவும் எனக்கு அதிகமான பொறுப்பு உள்ளது என்றார்.அவரிடம் சூர்யா கீழடி சரச்சை குறித்து கேட்டனர். அதற்கு சினேகன் பதில் அளிக்கையில், என்ன நடந்தது என்று தெரியாது.வெறும் தகவல்களின் அடிப்படையில் பேசுவது சரியாக இருக்காது. இதை சூர்யா வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சரியாக இருக்காது
ஏதோ தெரியாமல் நடந்திருக்கலாம். தகவல் தொடர்புகள் சரியாக இல்லாமல் போனதால் நடந்திருக்கலாம். பெரிய விஷயமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டாம். அன்றைக்கு அந்த காணொளியை நானும் பார்த்த போது வருத்தப்பட்டேன்.. சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது வேறுமாதிரி சொல்கிறார்கள். விசாரணையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். எனவே நான் ஒரு கருத்து சொல்வது சரியாக இருக்காது. கீழடி என்பது அனைவருக்கும் பொதுவானது. எல்லோரும் பார்க்க வரலாம்" இவ்வாறு சினேகன் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications