மதுரையில் குஷ்பு கைது.. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பேரணிக்கு முயன்றபோது நடவடிக்கை
மதுரை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. மதுரையில் அனுமதியை மீறி போராட்டம், பேரணி செல்ல முயன்றதாக குஷ்பு உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை உறுதி செய்யவும் பாஜக மகளிர் அணி சார்பில் பேரணி அறிவிக்கப்பட்டது. மதுரையில் இந்த பேரணியை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தொடங்கி வைப்பார் என்றும், பேரணி திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பேரணியில் இறுதியில், பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து மனு அளிக்க இருந்தனர்.

இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. அனுமதி மறுப்புக்கு கண்டனம் தெரிவித்திருந்த பாஜகவினர், இன்று காலை திட்டமிட்டபடி மதுரை சிம்மக்கலில் உள்ள செல்லாத்தமன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கண்ணகி சிலை முன்பு திரண்டனர். அங்கு தீச்சட்டி ஏந்தி சாமியாடிய பாஜகவினர் பின்னர் பேரணியை தொடங்க முயன்றனர். ஆனால், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைதாகியுள்ளனர்.
முன்னதாக பேரணியை தொடக்கி வைத்து பேசிய குஷ்பு, "திமுக அரசுக்கு எதிராக, மாநிலத்தில் நடக்கும் குற்றங்களுக்கு எதிராக நாங்கள் பேரணி நடத்த அனுமதி கேட்டால் அவர்கள் கொடுக்க மாட்டார்கள் என்று எங்களுக்கு தெரியும். எங்களுக்கு மட்டுமல்ல, வேறு யாருக்குமே அவர்கள் அனுமதியை கொடுப்பதில்லை. பாஜக எதை பேசினாலும் அதில் உண்மை இருக்கும். எனவே காவல்துறை அனுமதி மறுக்கிறது. கண்ணகி பிறந்த மண் இது. என்னுடை மண்ணில் எந்த பிரச்சனை இருந்தாலும் அதற்காக நான் வந்து நிற்பேன். நாங்கள் பேசுவதை மக்கள் காது கொடுத்து கேட்க தொடங்கிவிட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். 6 முறை சாட்டையால் தன்னை அடித்துக்கொண்டு, அறுபடை முருகன் வீடுகளிலும் இந்த சம்பவம் குறித்து முறையிட உள்ளதாக அவர் கூறியிருந்தார். சொன்னதை போலவே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தியிருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறியிருந்தது.
அதேநேரம், மாணவி வன்கொடுமை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பாஜக கோரியிருந்தது. ஆனால் இந்த கோரிக்கை தமிழக அரசு நிராகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications