Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kulasai Dasara: குலசை தசரா விழாவில் சினிமா கலைஞர்களை வைத்து ஆபாச நடனமா? ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: குலசை தசரா (Kulasai Dasara) திருவிழாவில் சினிமா சின்னத்திரை நடிகர், நடிகைகளை அழைத்து வந்து இரட்டை அர்த்த பாடல்கள், ஆபாசமான நடனங்களை ஆட தடை விதித்து மதுரை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இவை பின்பற்றப்படவில்லை என திருச்செந்தூரை சேர்ந்தவர் மதுரை ஐகோர்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா கோலாகலமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மைசூருக்கு அடுத்த படியாக பெரும் புகழ்பெற்ற தசரா திருவிழாவாக குலசை தசரா திருவிழா விளங்கி வருகிறது.

kulasai-kulasekarapattinam-dasara-madurai-high-court-raises-concern-over-alleged-indecent-dancing

குலசை தசரா திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் மட்டும் இன்றி தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேடமணிந்து, யாசகம் பெற்று ஆட்டோ, லோடு ஆட்டோ, வேன்களில் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதற்காக பக்தர்கள் பலரும் தங்கள் ஊர்களில் செட் அமைத்து கொடி ஏறியதில் இருந்து 10 நாட்களுக்கு சாமி தரிசனம் செய்து வழிபடுவார்கள்.

நடப்பு ஆண்டில் நேற்று முன் தினம் குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தசராவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் காளி, சிவன், முருகப்பெருமான், புராணங்களின் கதாபாத்திரங்கள், குரங்கு, புலி உள்ளிட்ட பல வேடங்களை பக்தர்கள் அணிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இது போக சினிமா சின்னத்திரை நடிகர்கள், நாட்டுப்புற கிராமிய நடன கலைஞர்களின் ஆட்டமும் ஒருசில இடங்களில் நடைபெறும்.

ஆபாச நடனம், இரட்டை அர்த்த பாடல்கள்

இந்த நிலையில் தான் குலசை தசரா விழாவில் இரட்டை அர்த்தமுள்ள பாடல்களுடன் ஆபாச நடனம் இடம் பெறுகிறது என்றும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இந்த திருவிழாவின்போது பக்தர்கள் 48 நாட்கள் வரை விரதம் இருந்து வேடம் அணிந்து ஊர், ஊராக சென்று காணிக்கை பெறுகிறார்கள். தசரா பண்டிகையின் இறுதி நாளில் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று தாங்கள் வசூல் செய்த காணிக்கையை கோவில் உண்டியலில் செலுத்துவார்கள்.

தடை விதிக்க வேண்டும்

இதில் அதிக காணிக்கை வசூல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் சினிமா, சின்னத்திரை நடிகர், நடிகைகளை அழைத்து வந்து இரட்டை அர்த்த பாடல்களுக்கு ஆபாசமான நடனங்களை ஆட வைக்கிறார்கள். இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதனை விசாரித்த ஐகோர்ட்டு, தசரா விழாவில் ஆபாச நடனத்துக்கு தடை விதித்தது.

இந்த ஐகோர்ட்டு உத்தரவை முறையாக பின்பற்றும்படி உள்ளூர் போலீசாருக்கு டிஜிபி சுற்றரிக்கை அனுப்பி இருந்தார். எனினும், கடந்த இரு ஆண்டுகளாக இந்த உத்தரவை தசரா குழுவினர் பின்பற்றவில்லை. இந்த திருவிழாவில் இரட்டை அர்த்த பாடல்களும், ஆபாச நடனங்களும் இடம் பெற்றிருந்தன. எனவே இந்த ஆண்டிலாவது இதுபோன்ற ஆபாச நடனம், இரட்டை அர்த்தமுள்ள பாடல்கள் நடைபெறாமல் இருக்க அதற்கு தடை விதிக்க வேண்டும். என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

ஐகோர்ட் போட்ட உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன், "குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் இரட்டை அர்த்தமுடைய பாடல்களும், ஆபாச நடனங்களும் நடைபெறுகிறதா என்று கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக திருச்செந்தூர் தாசில்தார், துணை போலீஸ் சூப்பிரண்டு அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து, இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+