திமுகவுக்கு ஆதரவாக பிரசாரமா? உதயநிதிக்கு வாழ்த்து கூறிய நடிகர் சூரி விளக்கம்.. ரொம்ப ஆர்வம் போலயே?

Subscribe to Oneindia Tamil

மதுரை: வரும் லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்து வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் நடிகர் சூரி திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்கிறாரா? என்ற கேள்விக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. வரும் ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக இந்த 40 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

Lok Sabha Election 2024 Am i campaign for DMK Actor Soori explains after he met with Udhyanidhi Stalin

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் தொடங்கி விட்டனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தென்மாவட்டங்களில் இருந்து தொடங்கி உள்ளார். முதலில் ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் லோக்சபா தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசாரத்தின்போது பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, நடிகர் சூரி சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கும், நடிகர் சூரிக்கும் இடையே நெருக்கமான நட்பு உள்ள நிலையில் வரும் லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக அவர் வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு நடிகர் சூரி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

விடுதலை 2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் மட்டுமே உள்ளது. விடுதலையில் எனக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அதேபோல் கருடன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. விடுதலை 2க்கு முன்பாகவே கருடன் படம் வெளியாகிவிடும். இது நல்ல தேர்தலாகவே இருக்கும். மக்களுக்கு நல்ல தேர்தலாக அமைந்தால் சந்தோஷம்'' என்றார்.

இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர் ‛நண்பர் உதயநிதி பிரசாரத்துக்கு அழைத்தாரா?'' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு நடிகர் சூரி, ‛‛அவர் என்னை அழைக்கவில்லை. சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறேன் என்பது அவருக்கு தெரியும். இதனால் படப்பிடிப்பை பாருங்கள் என்று அவர் சொல்லிவிடுவார். அவருக்கு என்னுடைய வாழ்த்து எப்போதும் இருக்கும்'' என்றார். இதன்மூலம் நடிகர் சூரியை, உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

ஆனாலும் நடிகர் சூரி கூறிய, ‛‛அவர் என்னை அழைக்கவில்லை'' என்ற வார்த்தை தற்போது கவனம் பெற்றுள்ளது. ஒருவேளை உதயநிதி ஸ்டாலின் அழைத்தால் நடிகர் சூரி பிரசாரம் செய்ய ஆர்வமாக இருக்கிறாரா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+