கையில் ‛தாமரை’.. மதுரையில் உற்சாகமான அமித்ஷா.. 2 கிமீ தூரம் ரோடு ஷோ.. மலர்தூவிய பாஜகவினர்
மதுரை: மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ தொடங்கியது. ரோடு ஷோவில் சாலையின் இருபுறமும் பாஜகவினர் குவிந்து மலர்தூவி வரவேற்ற நிலையில் அமித்ஷா கையில் தாமரை சின்னம் வைத்தபடி பொதுமக்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தங்களின் பிரசாரத்தை தீவிரமாக்கி உள்ளனர்.

இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தனி விமானத்தில் மதுரை வந்திறங்கினார். இந்நிலையில் தான் திட்டமிட்டப்படி அமித்ஷாவின் மதுரை ரோடு ஷோ 7 மணிக்கு தொடங்கியது.
ஹெலிகாப்டரால் வந்த சிக்கல்.. கடைசி நேர தகவலால் அமித்ஷாவின் திருமயம் விசிட் திடீர் ரத்து.. பின்னணி
மதுரை நேதாஜி சாலையில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவிலில் இருந்து அமித்ஷாவின் ரோடு ஷோ தொடங்கியது. மதுரை லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ராம சீனிவாசன், அமித்ஷாவுடன் வாகனத்தில் நின்றார். இந்த ரோடு ஷோ மதுரை தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்கத்தூண் வரை செல்ல 2 கிலோமீட்டர் தூரம் நடைபெற உள்ளது.
இந்த ரோடு ஷோவில் அமித்ஷா கையில் பாஜகவின் சின்னமான தாமரையை வைத்திருந்தார். அமித்ஷாவை பாஜகவினர் பூத்தூவி வரவேற்றனர். சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற தொண்டர்களை பார்த்து அமித்ஷா கைகள் அசைத்தும், தாமரை சின்னத்தை காண்பித்தும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அமித்ஷாவின் இந்த ரோடு ஷோவால் பாஜகவினர் உற்சாகமாகி உள்ளனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications