திமுகவில் விரைவில் மாற்றம் வரும்.. எல்லாம் சரியாகும்.. மு.க அழகிரி பரபரப்பு பேச்சு!
உண்மையாக திமுகவில் உழைத்தவர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்கள் என்று திமுக கட்சி குறித்து அதன் முன்னாள் உறுப்பினர் மு.க அழகிரி பேட்டியளித்து இருக்கிறார்.
மதுரை: உண்மையாக திமுகவில் உழைத்தவர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்கள் என்று திமுக கட்சி குறித்து அதன் முன்னாள் உறுப்பினர் மு.க அழகிரி பேட்டியளித்து இருக்கிறார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திமுக முன்னாள் எம்.பி மு.க அழகிரி திமுக குறித்து பேசினார். திமுகவில் ஜனநாயகமே இப்போது இல்லை என்று அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
திமுக மீது அழகிரி கடுமையான விமர்சனங்களை வைத்தார். விரைவில் திமுகவில் மாற்றம் ஏற்படும் என்று அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார்
மு.க அழகிரி தனது பேச்சில், திமுகவில் மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் எதோ சம்பளம் வாங்கும் பணியாளர்கள் போல நடத்தப்படுகிறார்கள். பழைய திமுக கட்சி போலவே இப்போது திமுகவில் யாரும் செயல்படவில்லை. முன்பு எல்லாம் இப்படி இல்லை.

முன்பு
முன்பு, கட்சியில் மாவட்ட செயலாளர்களுக்கு நிறைய மதிப்பு இருந்தது. கட்சி சார்பாக அவர்கள் நிறைய பணிகளை செய்து கொண்டு இருந்தார்கள். கட்சியும் வளர்ந்து கொண்டே இருந்தது. அப்போது அவர்களுக்கு எல்லாம் ஒரு மாஸ் இருந்தது.

இப்போது என்ன
தற்போது உள்ள மாவட்ட செயலாளர்கள் பினாமிகள் போல் செயல்படுகிறார்கள். அப்படிப்பட்ட நிலைமை எல்லாம் மாற வேண்டும். கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை.

உண்மை என்ன
உண்மையாக இங்கு உழைத்தவர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்கள். இப்போது எதுவும் செய்யாதவர்கள் பதவியை பெற்று இருக்கிறார்கள். விரைவில் அந்த மோசமான சூழ்நிலை மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, என்று அழகிரி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications