இளைஞர் அஜித்குமார் வழக்கு.. மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட்.. தமிழக காவல்துறை நடவடிக்கை!
சிவகங்கை: மடப்புரம் கோவில் காவலாளியாக பணியாற்றிய இளைஞர் அஜித்குமார் மரணம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சிவகங்கை எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞரை போலீசார் திருட்டு வழக்கில் விசாரணை மேற்கொள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் போலீசார் கடுமையாக தாக்கிய நிலையில், அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து காவலர்கள் ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன், ஆனந்த், ராமச்சந்திரன், கண்ணன் ஆகிய 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் கடுமையான கண்டனத்தை தொடர்ந்து, வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஆஷிஷ் ராவத் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் சிவகங்கை மாவட்ட பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை காவலர்கள் சீருடை கூட அணியாமல் அஜித்குமாரை மடப்புரம் காளியம்மான் கோயில் பின்புறம் பைப்பை வைத்து அடிக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஒருவர், தண்ணீர் கூட கொடுக்காமல் வாயில் மிளகாய் பொடியை கொடுத்து அடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சூழலில், டிஎஸ்பி சண்முகசுந்தரமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது விவாதமாகி இருக்கிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications