சவுக்கு சங்கர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? நேரில் ஆஜராக ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மதுரை: சர்ச்சைக்குரிய நபரான சவுக்கு சங்கர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் நீதித்துறையை உள்நோக்கத்துடன் விமர்சித்ததால் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
யூ டியூபில் மாரிதாஸ் என்ற நபர் பல்வேறு அவதூறுகளை பரப்பி வந்தார். அதனால் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். மாரிதாஸ் தொடர்பான வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து சமூக வலைதளத்தில் சவுக்கு சங்கர் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டார் என்பது புகார்.

இதனையடுத்து சவுக்கு சங்கர் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில் சவுக்கு சங்கர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.
இன்றைய விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அரசு தரப்பு, லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய சவுக்கு சங்கர் 2010-ல் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு கருணைத் தொகையாக மாதம் ரூ40,000 வழங்கப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் சுமார் ரூ50 லட்சத்துக்கும் மேல் சவுக்கு சங்கர் கருணை ஊதியம் பெற்றுள்ளார் என கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கருக்கான ஊதியத்தை நிறுத்த வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications