மதுரை, தூத்துக்குடி மக்களுக்கு நல்ல செய்தி.. 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் தடை
மதுரை: மதுரை எலியார்பத்தி சுங்க சாவடி, தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய 2 சுங்க சாவடிகளிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. 2011 முதல் மத்திய அரசு அனுமதியுடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த இரண்டு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்க தற்காலிகமாக தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. முறையான சாலை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "மதுரை எலியார்பத்தி சுங்க சாவடி, தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய 2 சுங்க சாவடிகளிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. 2011 முதல் மத்திய அரசு அனுமதியுடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடியில் மத்திய அரசு நிர்ணயித்தை தொகையை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மாதம்தோறும் 11 கோடி ரூபாய் வசூலாகும் நிலையில், 30 லட்சம் ரூபாய் மட்டும் தான் பராமரிப்பு பணிக்காக செலவிடுகிறாரகள். மதுரை - தூத்துக்குடி சாலையில் சுங்கச் கட்டண வசூல் செய்ய ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனம் நெடுஞ்சாலையை பராமரிக்க ரூ.563.83 கோடி பணத்தை இவரை செலவிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செலவிடப்படவில்லை.
மதுரை - தூத்துக்குடி இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தின்படி தேசிய நெடுஞ்சாலையைப் முறையாக பராமரிக்க வேண்டும். அதன்படி நெடுஞ்சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால் ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தின்படி சாலையின் ஓரங்களில் மரக்கன்றுகள் நடவில்லை. சாலை ஒப்பந்த அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் மற்றும் நெடுஞ்சாலை நடுவில் (சென்டர் மீடியன்) செடிகள் நட்டு பரமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். ஆனால், அதுபேன்ற எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக கடந்த 2023-ல் தனியார் நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்த தேசிய நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தம் தொடர்பாக புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்படாமல் தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது அங்கு முறையான சாலைகள் அமைக்கவில்லை, கழிப்பறை வசதிகள் இல்லை, சாலையோரங்களில் மரம் நடுவதில்லை. எனவே மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் மரங்கள், நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் வாகன ஒட்டிகளிடம் 30 சதவீத சுங்க கட்டணம் மட்டும் வசூலிக்க உத்தரவிட வேண்டும்," இவ்வாறு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரியம் கிலீட் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், ஒப்பந்தப்படி உரிய வகையில் சுங்க கட்டணம் வசூலிக்காமல், சாலைகளைப் பராமரிக்காமல் இருப்பது சட்ட விரோதம் என்று விமர்சித்தனர்.
இயற்கை நீதிக்கு எதிரானது என்று கூறிய மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தூத்துக்குடி - மதுரை இடையே சென்று வரக் கூடிய வாகனங்களுக்கு 2 சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையர் பதில் மனுத்தாக்கல் செய்யும் உத்தரவிட்டதுடன், தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications