காவல்துறையினர் அலட்சியத்துடன் செயல்படக் கூடாது..விளாத்திகுளம் மாணவி வழக்கில் நீதிபதிகள் சுளீர்
மதுரை: விளாத்திகுளம் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கை ஏப்ரல் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 5 பேரிடம் டிஎன்ஏ சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது என அரசுத்தரப்பு கூறிய நிலையில், மாணவி காணவில்லை என்பது முக்கியமான புகார். அதில் காவல்துறையினர் அலட்சியத்துடன் செயல்படக்கூடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் மாரீஸ்வரி, விளாத்திகுளத்தில் 12 ஆம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,"ஆய்வக பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சந்தேகத்துக்கிடமானவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கிடமானவர்களிடம் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது"என வாதிட்டார்.
இதனையடுத்து பேசிய நீதிபதிகள்," விசாரணை சரியான முறையில் சென்று வருகிறது. பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவாக பதிவு செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அறிவியல் முறையில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். மாணவி காணவில்லை என்பது முக்கியமான புகார். அதில் காவல்துறையினர் அலட்சியத்துடன் செயல்படக்கூடாது. விசாரணை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்றனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications