டிக் டாக் செயலியை டவுன்லோட் செய்ய தடைசெய்யுங்க... மத்திய அரசுக்கு ஹைகோர்ட் கண்டிப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் டிக்-டாக் செயலிக்கு தடைவிதிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் டிக்டாக் செயலி இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,

Madras high court order, Centre to ban downloading of TikTok app

பலர் அந்த செயலிக்கு அடிமையாகியுள்ளனர். இதனால் பல்வேறு விதமான சமூக சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது. பெண்கள் பதிவிடும் வீடியோக்களை சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற சமுதாயத்தை சீர்குலைக்கும் வீடியோக்களை தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் இத்தகைய விஷயங்களுக்கு நீதிமன்றமே தடை விதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது என்று மத்திய அரசை கண்டித்த நீதிபதிகள், டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் டிக்-டாக் செயலிக்கு தடைவிதிப்பது குறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணைய செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, நீதிபதிகள் இந்த வழக்கை ஏப்ரல் 16ம் தேதிக்கு வழககை ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+