Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல் மனைவி நிஷாவுடன் "பழக" கணவர் செய்த அசிங்கம்! மதுரையில் அத்தை மகள் லாவண்யாவுக்கு வந்துச்சே கோபம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: 3 திருமணம் செய்தும் நிம்மதியில்லாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார் நிஷா.. அதேபோல 2வது திருமணம் செய்துகொண்ட தன்னுடைய கணவர் மீது, காவல்துறையில் புகார் தந்துள்ளார் லாவண்யா.. என்ன நடந்தது மதுரையில்? இதற்கெல்லாம் காரணகர்த்தாவான ஜெயபாண்டியன் யார்? இவர்மீது நிஷா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் என்னென்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது.. இவருக்கு கடந்த 2005ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த முகமது ஜூபைர் என்பவருடன் திருமணம் நடந்தது.. ஆனால், கடந்த 2011ம் ஆண்டு, மஸ்கட்டில் நடந்த விபத்து ஒன்றில் ஜூபைர் இறந்துவிட்டதாக தெரிகிறது..

Madurai Nisha lavanya

இதனால் நிஷா தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.. அப்போதுதான் பக்கத்து வீட்டில் வசித்த ஆரல்வாய்மொழி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராமுடன் நட்பு ஏற்பட்டுள்ளது..

ஜமாத் மூலம் திருமணம்

ஒருகட்டத்தில் இருவரும் நெருங்கிப்பழகிய நிலையில, ஜமாத் மூலம் கடந்த 2013ல் நிஷாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ராஜாராம்.. பிறகு, இந்த தம்பதி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி போலீஸ் குவார்ட்டஸில் வசித்து வந்தனர்.

ஆனால், எஸ்ஐ ராஜாராமுக்கு உயிருக்கு ஆபத்தான நோய் இருந்ததாகவும், இதனால் நிஷாவுடன் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழவில்தான், ராஜாராமுக்கு டிரைவராக பணியாற்றிய எஸ்ஐ ஜெயபாண்டியன், நிஷாவுக்கு அறிமுகமானார்.. நிறைய உதவிகளை நிஷாவுக்கு செய்யத் தொடங்கினார்.

நிஷாவுக்கு 3வது கல்யாணம்

பிறகு ராஜாராமுடன் நடந்த திருமணம் செல்லாது என்று சொல்லி, ஜெயபாண்டியன் நிஷாவை கோவிலில் வைத்து தாலி கட்டி 3வதாக திருமணம் செய்து கொண்டார்.

2016ல் ஜெயபாண்டியனுக்கு மதுரைக்கு டிரான்ஸ்பர் கிடைத்துள்ளது.. எனவே ஐராவத நல்லூரில் வீடு எடுத்து நிஷாவுடன் தங்கி வசித்து வந்தார் ஜெயபாண்டியன்.. எனினும், மற்ற பெண்களுடனும் ஜெயபாண்டியனுக்கு தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது..

ஜெயபாண்டியனின் நடவடிக்கையில் நிஷாவுக்கு சந்தேகமும் வலுத்தது.. பல பெண்களுடன் போனில் பேசுவது, மெசேஜ் அனுப்புவது போன்ற செயல்களை நிஷா கண்காணிக்க துவங்கினார்.. இதுகுறித்து நேரடியாகவே ஜெயபாண்டியனிடம் கேட்டதற்கு, தன்னுடைய அத்தை மகள் லாவண்யா, வாழ்க்கையில் பாதிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு அடிக்கடி ஆறுதலை சொல்லி வருவதாக சமாளித்தார்..

லாவண்யாவுடன் திருமணம்

ஆனால், தனக்கு தெரியாமல் நிஷாவை திருமணம் செய்தது லாவண்யாவுக்கு அதிர்ச்சியை தந்தது.. காரணம், லாவண்யாவை இரண்டாவது திருமணம் செய்திருந்தாராம் ஜெயபாண்டியன்.. இதையறிந்த லாவண்யா, உடனடியாக ஜெயபாண்டியன் மீது போலீஸில் புகார் தந்துள்ளார்..

இதனிடையே, ஜெயபாண்டியன் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி, மதுரை கமிஷனர் ஆபீஸில் நிஷா புகார் தந்தார்.. அப்போது, ஜெயபாண்டியன் தண்ணி அடித்துவிட்டு, என்னை கொடுமைப்படுத்துகிறார்.. என்னுடைய சொத்துக்கள், நகைகள், பணத்தை அபகரித்துவிட்டார்.. என்னுடைய சொத்துக்களில் 35 லட்சம் மதிப்புள்ள வீடு, 20 சவரன் நகைகள், வெளிநாட்டு இன்சூரன்ஸ் தொகையை அபகரித்துவிட்டார்.

தகாத உறவில் ஈடுபட வற்புறுத்தல்

தகாத உறவில் ஈடுபடுமாறு மிரட்டுகிறார். தன்னுடைய போலீஸ்கார நண்பர்களை அழைத்து வந்து, பழக வற்புறுத்துகிறார்.. இதன்மூலம் என்னை தற்கொலைக்குத் தூண்டினார்" என்றெல்லாம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நிஷா புகார் அளித்தார்.

ஜெயபாண்டியன் மீது புகாரை தருவதற்காக நிஷா போலீஸ் ஸ்டேஷன் சென்றபோதுதான், லாவண்யாவை ஜெயபாண்டியன் 2வது திருமணம் செய்தது நிஷாவுக்கும் தெரியவந்து அதிர்ச்சியடைந்தார்.. இப்போது காதல், திருமண மோசடி விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துள்ள நிலையில், விசாரணை ஆரம்பமாகியிருக்கிறது.

நிஷாவுடன் தன்னுடைய நண்பர்களை நெருக்கமாக பழகவிட்டால், அதை வைத்தே நிஷாவை லாக் செய்துவிடலாம், தன்னுடைய விஷயத்தில் குறுக்கிட மாட்டார் என்றெல்லாம் கணக்கு போட்டாராம் ஜெயபாண்டியன்.. ஆனால், போலீஸ் வரை 2 பெண்களும் செல்வார் என்று எதிர்பார்க்கவில்லையாம்.

இன்ஸ்பெக்டர் ராஜாராம் தனக்கு திருமணமானதை மறைத்து ஏமாற்றியதாக நிஷாவும், ஜெயபாண்டியன் தனக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்து கொண்டதாக லாவண்யாவும் புகார்களை மாறி மாறி சொல்லி உள்ளது, பெரும் பரபரப்பை மதுரையில் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+