தூங்கும் புலியை சீண்டிவிட்டார்கள்! பாகிஸ்தானை விடக் கூடாது! கொதித்த மதுரை ஆதீனம்
மதுரை: தூங்கும் புலியை சீண்டியதால் அதற்கான விளைவை பாகிஸ்தான் அனுபவித்தே ஆக வேண்டும் என மதுரை ஆதீனம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். அந்த நாட்டுடன் எந்த நாடுகளும் தொடர்பு கொள்ள கூடாது. இந்தியாவில் வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இன்று மத தீவிரவாதத்தில் ஈடுபடுவது பாகிஸ்தான். அதை தூண்டி விடுவது சீனா. காஷ்மீர் விவகாரத்தில் தற்போதைய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கிறது. நேரு ஆட்சியின் போது பல்வேறு இடங்களை இழந்துவிட்டோம். மோடி நம்பர் ஒன் பிரதமராக உள்ளார்.
பாரதநாடு சமாதானத்தையே விரும்புகிறது. ஆனால் தூங்கும் புலியை இடறியதால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் அனுபவித்தே ஆக வேண்டும். தீவிரவாத தாக்குதலுக்காக சிந்து நதி நீர் நிறுத்தப்பட்ட முடிவு சரியானதுதான். அவர்களுக்கு தண்ணீரே கொடுக்கக் கூடாது.
அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லாமல் இந்தியர்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். எனவே தண்ணீர் மட்டுமில்லை, காற்றையும் கூட அவர்களுக்கு தரக் கூடாது. ராகுல் சின்ன பையன் அவருக்கு ஒன்றுமே தெரியாது. இலங்கையில் தமிழர்களை மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு இருந்த போதுதான் ராஜபக்சே அரசு கொலை செய்தது. அப்போது வாஜ்பாய் ஆட்சியில் கொடுத்த பதிலடி போல் இந்த முறையும் பாகிஸ்தானுக்கு பதிலடி தர வேண்டும் என பேசினார்.
கடந்த 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமின் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் ரசித்துக் கொண்டிருந்த போது பயங்கரவாத தாக்குதல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்தியாவைச் சேர்ந்த 25 பேரும் நேபாள நாட்டவர் ஒருவரும் என 26 பேர் பலியாகிவிட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடியாக இந்திய அரசு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துவிட்டது. இதனால் பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும், விவசாயம் பாதிக்கும், நீர் மின் நிலையங்களுக்கு தண்ணீர் இல்லாமல் மின்சார பற்றாக்குறையும் ஏற்படும். அது போல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications