குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள்.. அள்ளி விட்ட மதுரை ஆதீனம்! அதிரடியாக நுழைந்த போலீஸ்! பரபர விசாரணை
மதுரை: உளுந்தூர்பேட்டை கார் விபத்து தொடர்பாக 2ஆவது முறையாக இன்று மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு போலீசார் புறப்பட்டுச் சென்றனர். விசாரணை குறித்த அனைத்தையும் அவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக மதுரை ஆதீனம் ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் முடிசூட்டப்பட்டார். இந்நிலையில் கடந்த மே மாதம் 2 ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் சென்றார்.
உளுந்தூர்பேட்டை பகுதியில் சாலையில் மற்றொரு கார் தன் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும், தன்னை சிலர் கொலை செய்ய முற்பட்டதாக கூறி மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதில் குறிப்பாக குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள் கொலை செய்ய முயற்சித்ததாக கூறியிருந்தார்.

மதுரை ஆதீனம்
இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்த சி.சி.டி.வி காட்சியை காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டு தவறான தகவல்களை மதுரை ஆதீனம் தரப்பினர் வெளியிடுவதாக கூறி அறிக்கை வெளியிட்டனர். வாகன விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பி மதமோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய கோரி சென்னை எழும்பூர் அருகே உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரில்சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் காவல்துறையினர் மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
கொலை சதி குற்றச்சாட்டு
இந்நிலையில் முன்ஜாமீன் கோரி மதுரை ஆதினம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். அப்போது மதுரை ஆதீனத்திற்கு 60 வயதுக்கு மேலே ஆனதால் நேரில் ஆஜராக கட்டாயம் இல்லை காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்து கொள்ளலாம் எனவும் காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மதுரை ஆதீனத்திற்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை சைபர் கிரைம் போலீஸ்
மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்துவதற்கு சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் காவல்துறையினர், மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு நேரில் வருகை தந்த சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பத்மகுமாரி தலைமையிலான காவல்துறையினர் மதுரை ஆதினத்திடம் கடந்த ஜூலை இருபதாம் தேதி நேரில் வருகை தந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தனியாக விசாரணையை நடத்தினர்.
போலீஸ் விசாரணை
மதுரை ஆதினம் ஹெர்னியா (குடல் இறக்க) அறுவை சிகிச்சை முடிவடைந்து மருத்துவ ஓய்வு எடுத்துவரும் நிலையில் படுக்கையில் படுத்திருக்கும் நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை தொடங்கிய போது மதுரை ஆதினம் தன்னால் எழுந்திருக்க முடியாது வழக்கு தொடர்பான ஆவணங்களை எடுத்து கொடுக்க உதவியாகவும், தனது தரப்பு வாதத்தை சொல்வதற்கும் தனக்கு தன் மட உதவியாளரை உதவிக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என மதுரை ஆதினத்தின் கோரிக்கையை காவல்துறையினர் நிராகரித்தனர்.
மதுரை மடம்
மதுரை ஆதீனம் மற்றும் அவருடைய ஓட்டுனர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது தொடர்பான பல்வேறு கேள்விகளை சைபர் கிரைம் காவல்துறையினர் எழுப்பினர். இந்த நிலையில் சென்றமுறை நடைபெற்ற விசாரணை என்பது ஆதீனம் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து இரண்டாவது முறையாக விசாரணை செய்வதற்காக இன்று சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பத்ம குமாரி . உள்ளிட்ட காவல்துறையினர் 11:20 மணியளவில் வருகை தந்தனர் சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு காவல் அதிகாரி புறப்பட்டுச் சென்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications