அலங்காநல்லூரில் அதிசயம்: மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை, இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த மைதானத்துக்கு "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகபிரசித்தி பெற்றது. இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வருவதை பார்ப்பதற்கென்றே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வருடா வருடம் கூடுவது வழக்கமாகும்.

ஜல்லிக்கட்டு: ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கென்று தனியாக இடம் எதுவும் இல்லை.. ஊருக்குள்ளேயே இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.. அந்த சமயங்களில் வாடிவாசல் அருகேயுள்ள காலரிகளில் அமர்ந்து, விஐபிக்கள் நிகழ்ச்சியை கண்டுகளிப்பார்கள்.. ஆனால், பொதுமக்கள், வெளிநாட்டினரால் இப்போட்டிகளை வசதியாக காண முடிவதில்லை.
அதனால்தான், ஜல்லிக்கட்டை எல்லாருமே ஒன்றுசேர்ந்து கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காகவே, பிரத்யேகமான ஜல்லிக்கட்டு விளையாட்டுத்திடல் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்தார்.. இதற்காக ரூ.44 கோடி ஒதுக்கப்பட்டு, கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கரில், பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு கட்டப்பட்டுள்ளது..
பார்வையாளர்கள்: இதற்கு "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.. இந்த அரங்கத்தை இன்று 24ம் தேதி திறந்து வைக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த மைதானத்தில் ஒரேநேரத்தில் 5 ஆயிரம் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது..கடந்த பொங்கல் பண்டிகைக்குள் இந்த மைதானம் தயாராகிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், கட்டுமான பணிகள் முழுமை பெறவில்லை.. எனவே, தற்போது முழுமையாக பணிகள் முடிந்து, திறப்பு நிலைக்கு தயாராகிவிட்டது. இன்று மதுரைவந்த முதல்வர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்துவைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டி: இன்று காலை 10.30 மணிக்கு ஜல்லிக்கட்டு மைதானம் திறந்துவைக்கப்பட்டது.. இதையடுதது, புதிய அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகளும் ஆரம்பமாகி உள்ளன.. இப்போட்டியை முதல்வர் ஸ்டாலின் கண்டுகளிக்க உள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிக்காகவே மைதானம் அமைக்கப்பட்டிருப்பது, மதுரைக்கு புதிய கம்பீரத்தையும், அடையாளத்தையும் தந்துள்ளது. இதனால், மதுரைவாசிகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர்!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications