இனிமேல் மதுரையில் பிச்சைக்காரர்களே இருக்க மாட்டார்கள்.. அரசு போட்ட மாஸ்டர்பிளான்.. செம திட்டம்
மதுரை: மதுரையில் இருக்கும் பிச்சைக்காரர்கள் இன்னும் சில மாதங்களில் மறுவாழ்வு பெற உள்ளனர். இதற்கான பணிகள் மத்திய அரசு மூலம் செய்யப்பட உள்ளது.
பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடும் பெரியவர்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை இடமாற்றம் செய்ய 30 நகரங்களை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. முதல் கட்டமாக இந்த 30 நகரங்களில் மொத்தமாக பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் மதுரையும் ஒரு நகரமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பாக நாடு முழுக்க இந்த திட்டம் 30 நகரங்களில் முதல் கட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்த நகரங்களில் அமைந்துள்ள ஹாட்ஸ்பாட்களை பின்-பாயின்ட் செய்வதில் மாவட்ட மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மத்திய அரசு பணிகளை செய்ய உள்ளது.
2026 ஆம் ஆண்டிற்குள் இந்த இடங்களை 'பிச்சைக்காரர்கள் இல்லாததாக' மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம். இந்த காலகட்டத்தில் மேலும் பல நகரங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்ன திட்டம்?: இந்த நகரங்கள் அனைத்தும் அவற்றின் மத மையங்கள், வரலாற்று முக்கியத்துவம் மற்றும் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றவை. இங்கே பல லட்சம் சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு மாதமும் வருகிறார்கள். இந்த நிலையில்தான்.. 'வாழ்வாதாரம் மற்றும் நிறுவனங்களுக்கான விளிம்புநிலை தனிநபர்களுக்கான ஆதரவு' (SMILE) என்ற துணைக்குழு திட்டத்தின் கீழ் இங்கே இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட உள்ளது.
செயலி: இதற்கான செயலி ஒன்றையும் உருவாக்க உள்ளனர். முறையான கணக்கெடுப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை எடுக்க 'பிக்ஷா-விருத்தி முக்த் பாரத்’ என்ற இலக்கை அடையவும் மத்திய அமைச்சகம் பிப்ரவரி மாதம் தேசிய அளவிலான போர்டல் மற்றும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் அதிகாரிகள் பிச்சைக்காரர்கள் பற்றிய தரவை பதிவேற்றவும், புதுப்பிக்கவும் முடியும்.
இதில் ஏற்கனவே 25 நகரங்களுக்கான செயல் திட்டம் தயாராக உள்ளது, மீதமுள்ள 5 - காங்க்ரா, கட்டாக், உதய்பூர் மற்றும் குஷிநகர் -க்கான ஒப்புதலுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது.
மதுரை: மதுரை இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று. இங்கே பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருடா வருடம் வருகின்றனர். இந்த நிலையில்தான் அங்கே பிச்சைக்காரர்களை முற்றிலுமாக ஒழிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
இந்த பிச்சைக்காரர்களுக்கு கல்வி முதல் வேலை வரை பல உதவிகளை செய்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கோழிக்கோடு, மதுரை, விஜயவாடா மற்றும் மைசூருவில் ஏற்கனவே பிச்சைக்காரர்கள் தொடர்பான கணக்கெடுப்பு முடிந்துவிட்டது.
அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சகம் நிதியளிக்க உள்ளது. திட்டத்தின் வரைபடம், கணக்கெடுப்பு, அணிதிரட்டல், மீட்பு மற்றும் இறுதியாக தங்குமிடத்திற்கு இடமாற்றம், அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது ஆகியவை திட்டமிட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.
கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மூலம் இந்த மக்களை மறுவாழ்வு நோக்கி கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications