மதநல்லிணக்க தமிழ்நாட்டிலா இப்படி.. கடும் நடவடிக்கை தேவை.. ஹிஜாப் விவகாரத்தில் கனிமொழி ஆவேசம்
மதுரை: மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் தமிழகம் விளங்கும் நிலையில் மதுரை மேலூர் வாக்குச்சாவடியில் ஹிஜாப்பை அகற்ற கூறிய பாஜக பூத் ஏஜென்ட் மீது கடும் நடவடிக்கை எடுக்க திமுகவின் கனிமொழி எம்பி வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் மக்கள் ஆர்வமாக வந்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இந்த வாக்குச்சாவடிக்கு இஸ்லாமிய பெண் ஒருவர் வாக்களிக்க வந்தார். ஹிஜாப் அணிந்திருந்த அவர் வாக்கு செலுத்த முயன்றார். அப்போது அங்கிருந்த பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன், அந்த பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றிவிட்டு வாக்களிக்குமாறு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வெளியேற்றம்
மேலும் அந்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிரிராஜன் கத்தினார். இதனால் வாக்குச்சாவடியில் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் ஓட்டுப்பதிவுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அவரை வெளியேற்றும்படி திமுக, அதிமுக பிரமுகர்கள் கூறினார்கள். இதையடுத்து அவர் வெளியேற்றப்பட்டார். இன்னொருவர் முகவராக அனுமதிக்கப்பட்டார்.

விசாரிக்க உத்தரவு
இதுதொடர்பாக கிரிராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை கலெக்டருக்கு உத்தரவிடப்பட உள்ளதாக தமிழக தேர்தல் கமிஷனர் பழனி குமார் கூறினார். மேலும் அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

கனிமொழி கண்டனம்
இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழியும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‛‛மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் தமிழகத்தில், மதுரை மேலூர் நகராட்சி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணிடம், பாஜக பூத் நிர்வாகி ஹிஜாப்பை அகற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்க முயன்ற அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

கர்நாடகத்தை தொடர்ந்து தமிழகம்
ஏற்கனவே கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் சில மாணவர்கள் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிஷால் அணிந்து கல்லூரி சென்றனர். தொடர் போராட்டங்கள் நடந்த நிலையில் கல்லூரிகளில் ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் பாஜக பூத் ஏஜென்ட் ஒருவர் வாக்களிக்க வந்த பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்ற வலியுறுத்தி சர்சசையை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications