கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிமணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி
மதுரை: கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா ஓராண்டு காலம் கொரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளராகப் பணியாற்றினார். மருத்துவர் சண்முகப் பிரியா கொரோனாவுக்கு பலியானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அனுப்பானடி சுகாதார மையத்தில் மருத்துவராக பணியாற்றியவர் சண்முகப் பிரியா. 8 மாத கர்ப்பிணியாக இருந்த போது கொரோனா தடுப்பு பணிக்காக ஓராண்டுக்கும் மேலாக இடைவிடாமல் பணியாற்றியவர் சண்முகப் பிரியா.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சண்முகப் பிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில் தனியார் மருத்துவமனையிலும் பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் டாக்டர் சண்முகப் பிரியா.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி சண்முகப் பிரியா நேற்று காலமானார். அவரது நுரையீரலில் பெரும்பகுதி கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி இருந்ததுதான் மரணத்துக்கு காரணமாகிவிட்டது என்றனர் மருத்துவர்கள்.
அத்துடன் கர்ப்பிணியாக இருந்ததால் கொரோனா தடுப்பூசியையும் சண்முகப் பிரியா போட்டுக் கொள்ளவில்லை. ஓராண்டு காலம் கொரோனா தடுப்பு பணியில் முன்களப் பணியாளராக பணியாற்றி உயிரை பறிகொடுத்திருக்கும் மருத்துவர் சண்முகப் பிரியாவின் மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் சண்முகப் பிரியாவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications