அண்ணாமலை ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றது எப்படி? சந்தேகம் கிளப்பும் திமுக ஐடி விங் மதுரை பாலா!
மதுரை: அண்ணாமலை ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றது எப்படி? என்ற கேள்வியோடு புதிய சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார் திமுக ஐடி விங் மாநில துணைச் செயலாளர் மதுரை பாலா.
அண்ணா ஆட்சிக்கு வந்த ஆண்டு 1967 என்பது தமிழ்நாட்டில் எழுத, படிக்கக் கூட தெரியாதவர்களுக்கு கூட தெரியும் என்றும் அப்படியிருக்கும் போது 1962ஆம் ஆண்டு மருதமலை கோவிலுக்கு மின்சாரம் வழங்க திமுக எப்படி முட்டுக்கட்டை போட்டிருக்க முடியும் என வினவியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் அண்ணாமலைக்கு வித்தியாசம் தெரியவில்லை என விமர்சித்துள்ள மதுரை பாலா, ஐபிஎஸ் பயிற்சி அகாடமி ஒன்றின் பெயரை குறிப்பிட்டு அதன் கூட்டு களவாணித்தனத்தால் தான் அண்ணாமலை ஐ.பி.எஸ். இண்டர்வியூவில் அதிக மதிப்பெண் எடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்ணாமலைக்கு தெரியுமா அறிவோட வாசனை என்று தான் இனி கேட்க வேண்டும் என்றும் வரலாறு தெரியாமல் தற்குறித்தனமாக அண்ணாமலை பேசியிருப்பதாகவும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் மதுரை பாலா விமர்சித்துள்ளார். மொத்தத்தில் அண்ணாமலையின் ஐ.பி.எஸ். தேர்ச்சி பற்றி சந்தேகம் கிளப்பியுள்ளார்.

அண்ணாமலையின் ஐ.பி.எஸ். தேர்ச்சி பற்றி திமுகவில் சந்தேகம் கிளப்பும் 2வது நபர் மதுரை பாலா. ஏற்கனவே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பொதுக்கூட்டங்களிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் அண்ணாமலை ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றது பற்றி சந்தேகம் கிளப்பியிருக்கிறார்.
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் தேவரை மையப்படுத்தி கருத்தை கூறி வருவது கவனிக்கத்தக்கது. மதுரையில் பேசிய போது முத்துராமலிங்கத் தேவர் பற்றியும் கோவை மாவட்டத்தில் சாண்டோ சின்னப்பா தேவர் பற்றியும் அவர் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications