மதுரையில் சாமியாடிய மாணவிகள்.. நடிகர் ராமரை ஏன் கூப்பிட்டீங்க? சலசலத்த புத்தக திருவிழா.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை புத்தக திருவிழாவில் மாணவிகள் அருள்வந்து ஆடியது தொடர்பாகவும், விருந்தினராக நடிகர் ராமரை அழைத்தது தொடர்பாகவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் தந்துள்ளது.

மதுரையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பபாசி ஒருங்கிணைப்பில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இந்த புத்தக திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

madurai book festival girl students

புத்தக திருவிழா: இந்த புத்தக திருவிழாவையொட்டி, மாணவர்கள், குழந்தைகளுக்காக பொழுதுபோக்கு அம்சங்கள், உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, வெவ்வேறு தலைப்புகளில் பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்க நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சிக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அப்படித்தான் நேற்றைய தினமும் புத்தக திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.. உள்ளூரைச் சேர்ந்த சில நாட்டுப்புற பின்னணி பாடகர்கள், கருப்பசாமி பாடல்களை பாட துவங்கினார்கள்.. அப்போது கருப்புசாமி வேடமணிந்த நபர் ஒருவர் கையில் அரிவாளுடன் மேடையில் இருந்து இறங்கி மாணவிகள் உட்காருந்திருந்த கூட்டத்தை நோக்கி ஆவேசமாக ஓடிவந்து ஆடத் ஆரம்பித்தார்.

மாணவிகள் : இதைப்பார்த்ததுமே, அங்கிருந்த மாணவிகளும், திடீரென அருள் வந்து சாமியாட தொடங்கினர். 40க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் இருக்கையிலிருந்தே சாமியாடினார்கள்..

இதைப்பார்த்து பதறிப்போன மற்ற மாணவிகள், சாமியாடும் மாணவிகளை தடுத்துநிறுத்தி, ஆசுவாசப்படுத்த முயன்றனர். ஆனாலும் மாணவிகள் சாமியாட்டத்தை நிறுத்தவில்லை. பல மாணவிகள் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர்.. இதையடுத்து, மாணவிகளை ஏன் சாமியாட வைக்கிறீர்கள்? என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டது..

நிர்வாக விளக்கம்: இந்நிலையில், இந்த நிகழ்வு குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் ஒன்றை தந்துள்ளது.. அதில், "நாட்டுப்புற கலைஞர்களால் பாடப்பட்ட கருப்பசாமி பாடலே ஒலிபரப்பப்பட்டது.. பாடல்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு சில மாணவிகள் சாமி ஆடினார்கள்.. சிலர் நடமாடினார்கள்.. பாடல் ஒலிபரப்பப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை.. முறையாகவே நிகழ்ச்சி நடத்தப்பட்டது" என்று மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

எனினும், இந் சம்பவத்தின் அடங்கவில்லை.. மாணவர்கள் ஏன் இரவு 8.30 மணிக்கு காத்திருக்க வைக்கப்பட்டனர்? அமைச்சருக்காக காத்திருக்க வைக்கப்பட்டனரா ? என்றும் கேள்வி பரவியது.. இதையடுத், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் இதுதொடர்பாக விசாரணை நடத்திக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட நிர்வாகம்: பள்ளி மாணவிகளை யார் அழைத்து வந்தது, அவர்கள் ஏன் காத்திருக்க வைக்கப்பட்டார்கள், விழாக் குழுவினரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் முன்கூட்டியே கருப்பசாமி வேடமிட்டு பாடல்கள் பாடப்படும் தகவல் தெரிவிக்கப்பட்டதா போன்ற விபரங்கள் எல்லாம் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல, முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, மதுரை எம்பி சு. வெங்கடேசன், பேச்சாளர்கள் ஞானசம்பந்தன், ஐ.லியோனி உள்ளிட்டோர் அழைக்கப்பட்ட நிலையில், நகைச்சுவை நடிகர் ராமரும் அழைக்கப்பட்டது, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், ராமர் மதுரையை சேர்ந்தவர், நகைச்சுவை என்ற தனித்திறமையால் அவரை அழைத்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், மாவட்ட நிர்வாகம் விளக்கம் தந்துள்ளனர்..

கலைக்குழுவினர்: அதேபோல, இந்த நிகழ்வு தொடர்பாக கலைக்குழுவினரும் விளக்கம் தந்துள்ளனர்.. அதில், சர்ச்சையான நிகழ்வு எதுவும் நடக்கவில்லை என்றும் நாட்டுப்புற கலைகளில் வேடமிட்டு, அரசு இசைக் கல்லூரியைச் சேர்ந்த கலைக் குழுவினர் இந்த பாடல்களைப் பாடியதாகவும் விளக்கத்தை தந்துள்ளனர். எனினும், இந்த சர்ச்சைகள் இன்னமும் ஓயவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+