கொலை வழக்கு.. ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு ஜாமின்.. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
மதுரை: கூட்டாளியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தார். குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணராஜ், முனியசாமி ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் செந்தில்குமாரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனையடுத்து செந்தில் குமார் சென்னையில் தலைமறைவானார்.

இதனிடையே செந்தில்குமார் திடீரென மாயமாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடிக்க கோரியும் அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள் செந்தில் குமாரை கொலை செய்தது தெரியவந்தது.
செந்தில் குமாரை சுட்டுக்கொன்று அவரது உடலை தாமிரபரணி ஆற்றில் வீசியதாக வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள் தெரிவித்தனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து வரிச்சியூர் செல்வம், உள்ளிட பலர் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள வரிச்சியூர் செல்வம், தனக்கு ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார்
அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த அக்டோபர் மாதம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த 15ஆம் தேதி நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கில் புதிதாக ஒட்டப்பிடாரம் காவல் துறையினர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் காவல் துறையினர் மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார். இந்நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications