பணமிருந்தும் பவுசு காட்டாத பி.டி.ஆர்.வாரிசு..! நண்பர்களுக்கு எளிமையாக விருந்து..!
Recommended Video
மதுரை: மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பி.தியாகராஜன் தனது பள்ளிக்கால நண்பர்களுக்கு எளிமையான முறையில் சிறிய உணவகம் ஒன்றில் விருந்து அளித்து உபசரித்துள்ளார்.
நீதிக்கட்சி தலைவராகவும், சென்னை மாகாண முதல்வராகவும் இருந்தவர் பி.டி.ராஜன். அவரது மகன் பழனிவேல் ராஜன் திமுகவின் மூத்த முன்னோடியாக இருந்து, 2006-ம் ஆண்டு அமைச்சர் பதவியேற்று சில நாட்களில் மறைந்தார். இப்படி பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை பின்னணியாக கொண்டு, அந்தக் குடும்பத்தின் 3-வது தலைமுறையாக அரசியலில் இருப்பவர் தியாகராஜன்.

மதுரை மத்திய தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக உள்ள தியாகராஜனை பொறுத்தவரை எப்போதும் எளிமையாக காட்சியளிப்பபர். கஞ்சி போட்டை சட்டையை அணிந்து காலரை தூக்கிவிடும் அரசியல்வாதிகள் மத்தியில், ஒரு சாதாரண வெள்ளைச் சட்டையும், ஜீன்ஸும் அணிவது இவரது வழக்கம். தோற்றத்தில் தான் எளிமையே தவிர பொருளாதாரம், நிதி உள்ளிட்ட விவகாரங்களில் ஆழ்ந்த புலமை உடையவர் தியாகராஜன்.
அமெரிக்காவில் படித்து அங்கேயே பல லட்சம் ரூபாய் மாத ஊதியத்திற்கு பணியாற்றி வந்த இவர், தந்தையின் மறைவை அடுத்து அரசியலுக்கு வந்தார். இவரது அறிவுக்கூர்மையை அறிந்த திமுக தலைமை தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவி அளித்துள்ளது.

இந்நிலையில், ஊட்டியில் 1972-ம் ஆண்டு முதல் 1981-ம் ஆண்டுவரை தன்னுடன் படித்த நண்பர்கள் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தியாகராஜனை சந்திப்பதற்காக மதுரை வந்திருந்தனர். அவர்களுக்கு, தான் எப்போதும் சாப்பிடும் திராவிடன் உணவகத்தில் நேற்றிரவு விருந்தளித்து உபசரித்தார் தியாகராஜன். தன்னிடம் இருக்கும் பதவிக்கும், பணத்திற்கும் நட்சத்திரவிடுதியிலேயே நண்பர்களுக்கு விருந்து தந்திருக்க முடியும்.
திராவிடன் உணவகத்தில் புரோட்டாவையும், சால்னாவையும் ரசித்து ருசித்து சாப்பிட்ட தியாகராஜனின் நண்பர்கள் அவருக்கு சபாஷ் போட்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications