நாளை தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்! என்ன நிற உடை அணிய போகிறாரோ?
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் தங்க குதிரையில் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நாளை அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த கண் கொள்ளா காட்சியை காண லட்சக்கணக்கானோர் திரள்வார்கள்.
மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 28ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும் ஏப்ரல் 29ஆம் தேதி திருத்தோரோட்டமும் நடந்தது.

இந்த நிலையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக நேற்று மாலை 6.15 மணிக்கு அழகர் மலையில் இருந்து கள்ளர் கோலத்தில் தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார். இன்று அதிகாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் மதுரை மூன்றுமாவடி அருகே கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.
இன்று இரவு 11 மணி முதல் 11.59 மணிக்குள் தல்லாங்குளத்தில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள வருகை தரும் கள்ளழகரை வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் வரவேற்கும் நிகழ்வு நடைபெறும். நாளை அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் அவர் இறங்குவார்.
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு கோவிந்தா கோவிந்தா என முழக்கமிடுவர். அப்போது அழகர் அணியும் பட்டாடையின் நிறத்திற்கு தனித்துவம் உண்டு.
நாளை பிற்பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறும். பிறகு இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.
மே 2ஆம் தேதி காலை 11.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை, வண்டியூர் வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி இடம்பெறும். அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மேல் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறும். இந்த நிகழ்வு பக்தர்களை இரவு முழுவதும் ஆன்மீகத்தில் திளைக்கச் செய்யும்.
மே 4ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து, தல்லாகுளத்தில் உள்ள மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் அழகர் மலை நோக்கி கள்ளழகர் புறப்படுவார். இறுதியாக, மே 5ஆம் தேதி காலை 10.40 - 11.10 மணிக்குள் கள்ளழகர் அழகர் மலைக்கு சென்றடைந்து திருவிழா நிறைவு பெறும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications