மகன் படித்த மதுரை அரசுப் பள்ளி.. 3 நாள் சம்பளமின்றி வேலை செய்த தந்தை.. கலெக்டர் தந்த இன்ப அதிர்ச்சி
மதுரை: தன் மகன் படித்த அரசுப் பள்ளயில் 3 நாட்கள் சம்பளம் இன்றி கட்டிட பணியினை செய்த தந்தையை பலரும் பாராட்டி வருகிறார்கள். மதுரை எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவன் பீமனின் தந்தை அழகுமுருகன் தான் சம்பளம் வாங்காமல் பள்ளியில் கட்டிட வேலை செய்திருக்கிறார். அவரை நேரில் அழைத்து பாராட்டி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் மதுரை கலெக்டர்.
அரசு பள்ளிகளில் படித்த பலர் இன்றும் அந்த பள்ளி நல்ல முறையில் இயங்க வேண்டும் என்று உதவி செய்து வருகிறார்கள். பல ஊர்களில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்த நிலையில், சில பள்ளிகள் மூடப்படும் நிலை உருவானது. அப்போது அந்த ஊரில் அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தங்கள் ஊரில் அரசு பள்ளி போய்விடக்கூடாது என்று கருதி, தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிக்கு பதில் அரசு பள்ளியில் சேர்த்தனர்.

அப்படி பல ஊர்களில் சம்பவங்கள் நடந்துள்ளன. சேர்த்ததுடன் மட்டுமின்றி, தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அப்படித்தான் மதுரையில் மகன் படித்த அரசுப் பள்ளிக்கு 3 நாள் ஊதியமின்றி கட்டிட பணி செய்துள்ளார் தந்தை. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
மதுரை எழுமலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அண்மையில் கட்டிட மராமத்து பணிகள் செய்ய வேண்டியதிருந்தது. இந்த வேலைகளை பார்க்க இப்பள்ளியில் படித்த மாணவனின் தந்தையும், உத்தப்புரத்தைச் சேர்ந்த கட்டிட பணியாளருமான அழகுமுருகனை அணுகியுள்ளார்கள். தலைமை ஆசிரியர் தனபால், முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் ஆகியோர் அழகுமுருகனை வேலை பார்க்குமாறு கூறியிருக்கிறார்கள்.

இதன்படி மூன்று நாட்கள் வேலை பார்த்த கட்டிட பணியாளர் அழகுமுருகளை அழைத்த தலைமையாசிரியர் தனபால் கூலியை வழங்கினார். அப்போது மாணவனின் தந்தை கூலி வேண்டாமென்று மறுத்துள்ளார். தன் மகன் படித்த இப்பள்ளிக்கு என்னால் முடிந்த உதவியாக இது இருக்கட்டும் என்று பணத்தை வாங்க திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து அழகுமுருகன் கூறும் போது, "என்னுடைய மகன் பீமன் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 படித்து முடித்தான். இப்போது திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. இளங்கலை பட்டப்படிப்பு படிக்கிறார்.
எனது மகனின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஏதோவொரு வகையில் உதவி செய்யவேண்டும் என நான் விரும்பினேன். அதனால் கூலி வாங்காமல் வேலை பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
ஆசிரியர் முருகேசன் இதுபற்றி கூறும் போது, "மாணவர் பீமன் பிளஸ் 2 தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து பூச்செடிகள், மரங்கள் நட்டு வளர்த்து வந்தார். அவருடைய செயலை பாராட்டிய ஒரு தனியார் நிறுவனம் பீமனின் உயர் கல்விக்கு ரூ.25 ஆயிரம் வழங்கி இருந்தது" என்றார். மகன், அப்பா இருவருமே பள்ளிக்கு செய்த சேவைகளை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் மகன் படித்த அரசுப் பள்ளிக்கு 3 நாள் ஊதியமின்றி கட்டிட பணி செய்த தந்தை அழகுமுருகனுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்ப அதிர்ச்சி அளித்தார். கட்டிட பணியாளர் அழகுமுருகனை நேரில் அழைத்த பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications