மதுரை அசையுது..ஆட்டத்தை கலைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.."திமிங்கலமே" மாட்டிக்கிச்சி.. கிலியில் திமுக?

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுகவின் மாநாடு, மதுரையில் ஆகஸ்ட் 20 ம் தேதி நடக்கவுள்ள நிலையில், சில முக்கிய எதிர்பார்ப்புகளை இந்த மாநாடு ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து நமக்கு சில ஸ்பெஷலான தகவல்களும் கிடைத்துள்ளன.

மதுரையில் மாநாடு என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததுமே, அரசியல் களம் பெருத்த கவனத்தை ஈர்க்க துவங்கிவிட்டது.

Madurai Conference and Are these the main Strategies of AIADMK Edappadi Palanisamy

இதற்கு காரணங்கள் இல்லாமல்... ஏற்கனவே முக்குலத்தோர் மீதான அதிருப்தியில் எடப்பாடி பழனிசாமி சிக்கி உள்ளார்.. இந்த அதிருப்தியை நீக்கி, வாக்கு சதவீதத்தை தென்மண்டலங்களில் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான், முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தையும், முக்கிய பொறுப்புகளையும் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.

செல்வாக்கு என்ன: ஆனால், இந்த 2 வருட காலமாகவே, எதிர்பார்த்த அளவுக்கு தென்மண்டலத்தில் எடப்பாடியால் ஆதரவை பெற முடியவில்லை என்கிறார்கள்.. ஓபிஎஸ்ஸுக்கு எந்த அளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கிறதோ அது, இதுவரை உறுதியாக தெரியவில்லை..

எந்த ஒரு தேர்தலிலும், தனித்து களமிறங்கும்போதுதான், தலைவர்களின் நிஜ பலம் தெரியவரும். அந்தவகையில், ஓபிஎஸ்ஸுக்கு தென்மண்டலத்தில் ஓரளவு ஆதரவுகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறதே தவிர, தனிப்பட்ட செல்வாக்கு என்ன? அவருக்கான வாக்கு சதவீதம் என்ன என்பது தெரியவில்லை. இது அதிமுகவின் எடப்பாடிக்கும் பொருந்தும் உண்மை.

பாஜக மேலிடம்: ஆனால், டிடிவி தினகரனுக்கென, பிரத்யேக ஓட்டு வங்கி உள்ளது. இதை கடந்த தேர்தல்களில் அமமுக நிரூபித்தும் உள்ளது.. தற்போது, ஓபிஎஸ் + டிடிவி ஒரே அணியில் திரண்டுள்ள நிலையில், இவர்களது செல்வாக்கையும் உடைக்க வேண்டிய நெருக்கடி எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்றிணைந்த அதிமுகவுக்கு, மேலிட பாஜக பெருத்த முயற்சி எடுத்து வரும்நிலையில், அந்த விஷயத்திலும் எடப்பாடியின் பிடிவாதம் தொடர்கிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான், மதுரை மாநாட்டை கூட்டி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இந்த மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்து, முக்குலத்தோர் ஆதரவை சம்பாதிக்க வேண்டும் + ஓபிஎஸ், தினகரன் இல்லாமலேயே அதிமுகவுக்கான செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் + ஒட்டுமொத்த அதிமுகவே தன்னுடைய தலைமையின்கீழ் சிறப்பாக செயல்படுகிறது என்பதையும் பறைசாற்ற வேண்டும். இப்படி 3 குறிக்கோள்களை மையப்படுத்தியே, மதுரையில் எடப்பாடி களமிறங்குவதாக தெரிகிறது.

சிம்ம சொப்பனம்: இந்நிலையில்தான், மாநாடு சம்பந்தமாக நமக்கு ஒரு பிரத்யேக செய்தி கிடைத்துள்ளது.. அதாவது, இந்த மாநாடு தன்னுடைய எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டும் என்பதில் ஏகத்துக்கும் மெனக்கெட்டுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. இதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கடுமையாக களப்பணியாற்றியிருக்கிறார்கள்... இருந்தாலும், மாநாடு நடக்கும் நாளில் தான் மாவட்ட செயலாளர்கள் எந்த அளவுக்கு உழைத்தனர் என்பது தெரிய வரும் என்கிற முணுமுணுப்புகளும் அதிமுகவில் இருக்கிறது.

அதேபோல, திமுக, அமமுக, பாமக, ஓபிஎஸ் அணி ஆகியவைகளிடமிருந்து சில "முக்கியஸ்தர்களை" இழுத்து அவர்களை மாநாட்டின்போது அதிமுகவில் சேர்த்து, எதிரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காய்களை நகர்த்தியிருந்தாராம்.. இதற்காக, பல வலைகளும் வீசப்பட்டுள்ளன.. ஆனால், எந்த மீன்களும் சிக்கவில்லையாம்..

ரகசிய டீல்: இதுகுறித்து அதிமுகவின் உள் வட்டங்களில் நாம் விசாரிக்கும்போது, "சில மீன்கள் சிக்கியிருக்கிறது.. அந்த மீன்கள் எடப்பாடியிடம் மட்டுமே டீல் செய்திருக்கின்றன... அதனை ரகசியமாக அடைக்காத்து வருகிறார். மாநாட்டின்போது அந்த மீன்கள் யார் என்பது தெரிய வரும்" என்கிறார்கள்.

Madurai Conference and Are these the main Strategies of AIADMK Edappadi Palanisamy

அதாவது, அதிமுகவின் சீனியர்களுக்கு கூட தெரியாமல், எடப்பாடி பழனிசாமி இந்த ரகசியத்தை காத்து வருகிறாரா? என்று ரத்தத்தின் ரத்தங்களே கேள்வி எழுப்பி வருகிறார்களாம். ஆக, மாநாடு குறித்த எதிர்பார்ப்பு அதிமுகவை விட திமுக, பாஜகவில் தான் அதிகம் இருக்கிறது என்கிறார்கள்..

இதற்கிடையே இன்னொரு தகவலும் நமக்கு கிடைத்துள்ளது.. இந்த மாநாட்டை பிரமாண்டப்படுத்துவதற்காக, பிரதமர் மோடியை மதுரைக்கு அழைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.. எப்படியாவது அவரை மாநாட்டுக்கு அழைத்து வந்து விட வேண்டும் என்று நிறைய முயற்சிகளையும் எடுத்திருந்தார்.

ஒற்றை பதில்: ஆனால், "நோ சான்ஸ்" என்ற ஒற்றை பதிலையே சொல்லி வருகிறதாம் டெல்லி மேலிடம்.. இந்த மாநாட்டில் மோடி பங்கேற்பாரானால், அதைவைத்தே ஓபிஎஸ் + தினகரனுக்கு ஒரு செக் வைக்கலாம் என்று எடப்பாடி போட்டிருந்த கணக்கும் நொறுங்கிவிட்டதாம்.. இதனால், பிரதமர் வரமாட்டார் என்று ஆதங்கத்தில் இருந்து வருகிறாராம் அதிமுகவின் பொதுச்செயலாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+