மதுரை எம்பி சு வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சுவலி.. விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதி
மதுரை: மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு வெங்கடேசனுக்கு இன்று திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மதுரை லோக்சபா தொகுதி எம்பியாக இருப்பவர் சு வெங்கடேசன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். கடந்த 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்றார்.
அதன்பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தான் இன்று விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க சு வெங்கடேசன் சென்றார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் விழுப்புரம் -திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சு வெங்கடேசனுக்கு தீவிர சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார். அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை எனவும், 6 மணிநேர கண்காணிப்புக்கு பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications