இனி தொழில் வளர்ச்சி எகிறப்போகுது.. டிச.7ல் வரும் அறிவிப்புக்கு முன்.. மதுரைக்கு வந்த நல்ல செய்தி!
மதுரை: மதுரை மேலூர் அருகே உள்ள வஞ்சிநகரம் பகுதியில் சிப்காட் நிறுவனம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில், மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வஞ்சிநகரில் சிப்காட் அமைப்பதற்கான உட்கட்டமைப்பு பணிகள் சுமார் 278 ஏக்கரில் தொடங்கப்பட உள்ளது.
2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொழில் வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்கேற்ப கோவை, ஒசூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் மதுரையில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மதுரை மாவட்டம் மேலூர் அருகில் பூதமங்கலம், வஞ்சிநகரம், கொடுக்கம்பட்டியில் சுமார் 278 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது மதுரையின் முதல் சிப்காப் தொழில் பூங்காவாகும். இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, உட்கட்டமைப்புக்கான டெண்டர் பணிகளும் தொடங்கின. ரூ.67 கோடியில் உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டி, தோல் அல்லாத காலனி, எலக்ட்ரிக்கல், இன்ஜினியரிங், வாகனம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே சிப்காட் அமைப்பதற்கான மத்திய சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஜூலை மாதமே தமிழக அரசு விண்ணப்பித்தது. இது சில மாதங்களாகவே பரிசீலனையில் இருந்து வந்தது. இதனால் சிப்காட் தொடங்கும் பணிகள் தாமதமாகின. தற்போது மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து தொழில் பூங்காவில் சாலை, மழைநீர் வடிவால் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
டிசம்பர் 7ஆம் தேதி மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவுள்ளது. இதனையொட்டி பல்வேறு முதலீடுகள் பெரியளவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் சிப்காட் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்திருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இதனால் மதுரை தொழில் வளர்ச்சியில் அடுத்தக் கட்டத்தை அடையும் என்று பார்க்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications