மதுரை மழை பாதிப்பு.. புகார் தெரிவிக்க உதவி எண்களை வெளியிட்டார் மதுரை மாவட்ட ஆட்சியர்!
மதுரை: மதுரையில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு, வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், பேரிடர் இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்களை அறிவித்துள்ளது மதுரை மாவட்ட நிர்வாகம்.
மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருகிறது. மதுரையில் நேற்று ஒரே நாளில் 10 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. மதுரையில் கொட்டிய கனமழையால் செல்லூர் கண்மாய் நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி அமைச்சர், அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை விடிய, விடிய பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் மற்றும் அதிகாரிகள் களத்தில் இறங்கி பணி செய்து வருகின்றனர்.
எனினும், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லூர் பகுதியில் உள்ள கட்டபொம்மன் நகர், பாண்டியன் நகர், டீச்சர்ஸ் காலனி மற்றும் மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு அங்குள்ள பல்வேறு தெருக்களில் தண்ணீர் இன்னும் வடியாத நிலை உள்ளது.
மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன!
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2024 முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மழைக்காலங்களில் கனமழை குறித்த தகவல்கள், வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு TN- Alert என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியினை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பருவநிலை தொடர்பான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பேரிடர் காலங்களில் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க கீழ்காணும் உதவி எண்ணினை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா (Toll Free) தொலைபேசி எண்: 1070
மாவட்ட கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா (Toll Free) தொலைபேசி எண்: 1077
மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை: 0452-2546161
வாட்ஸ் அப் எண்: 96550 66404
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications