மதுரை கலெக்டர் கார் ஜப்தி - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
மதுரை: மதுரையில் 1981 ஆம் வருடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்காக மாவட்ட ஆட்சியர் பயன்படுத்தி வந்த வாகனம் ஜப்தி செய்யப்பட்டது.
மதுரை எல்லீஸ் நகரில் 12 பேருக்கு சொந்தமான 99 செண்ட் நிலத்தை 1981 ஆம் வருடம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்டது.

உரிய காலகட்டத்தில் நிலத்திற்கான இழப்பீடு வழங்காததால் 1984 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் தீர்ப்பின் படி முதல் கட்டமாக 1999 ஆம் வருடம் 8 இலட்சத்து 70 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. இழப்பீடு முழுமையாக வழங்கப்படாத காரணத்தால் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி 8 இலட்சத்து 70 ஆயிரத்து 166 ரூபாய் 30 காசுகள் இழப்பீடு தொகைக்காக மாவட்ட ஆட்சியரின் 6 வாகனங்கள் மற்றும் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது.

தீர்ப்பின் படி நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை ஜப்தி செய்தனர.
தகவலறிந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பேச்சுவார்த்தைக்காக நீதிமன்ற குழுவினரை அழைத்தார். இதன்படி தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இவ்வழக்கில் 37 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications