மன்னித்துவிடுங்கள்! திருந்தி வாழ்கிறேன்! கோர்ட்டில் மன்றாடிய டிடிஎஃப் வாசன்! ஜாமீன் வழங்கிய நீதிபதி
மதுரை: ஜூன் 4ஆம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதால் தனக்கு ஜாமீன் வேண்டும் என டிடிஎப் வாசன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.
இதற்கு வேண்டிய ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிபதி தெரிவித்திருந்த நிலையில் இந்த மனுவின் மீது மதியம் 2.40 மணிக்கு விசாரணை நடத்தப்படுகிறது.

செல்போனில் பேசியபடி கார் ஓட்டியதாக டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு மீது மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுப்புலட்சுமி மதியம் 2.40 மணிக்கு விசாரணை நடத்தினார்.
இது மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரும், சமூக ஊடக கண்காணிப்பு காவலருமான மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் கீழ் அண்ணாநகர் காவல் துறையினர் வாசன் மீது செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்குதல், அஜாக்கிரதையாக காரை இயக்குதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், கவனக்குறைவாக காரை இயக்குதல், அதிவேகமாக இயக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சென்னையில் கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஏற்கெனவே பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் காரில் செல்போனில் பேசியபடியே ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரை இயக்கியதாக டிடிஎஃப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில் நேற்று அவரை மதுரை அண்ணாநகர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அவர் மீது மேலும் ஒரு வழக்காக 308 பிரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. 308 பிரிவு என்பது பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் ஒரு காரியத்தை செய்தல் என்பதாகும். இந்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ததால் அவரால் ஜாமீனில் வெளியே வர முடியாது. இந்த புதிய வழக்குடன் சேர்த்து 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனக்கு வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் படப்பிடிப்பு இருப்பதால் ஜாமீன் அளிக்குமாறு கோரியிருந்தார். மேலும் தான் காரை இயக்கியதால் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தனது வாதத்தில் கூறியிருந்தார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்கு பைக் ஓட்ட கூடாது என எச்சரிக்கை விடுத்தும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காரை இயக்கியுள்ளார். போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார் என அரசு தரப்பு வாதம் செய்துள்ளது. இதையடுத்து ஜாமீன் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறும் அதன் மீது மதியம் 2.40 மணிக்கு விசாரிப்பதாகவும் நீதிபதி சுப்புலட்சுமி தெரிவித்திருந்தார்.
அப்போது வாசன் தரப்பினர், வாசன் வளர்ந்து வரும் இளைஞர். அவருக்கு வரும் 4 ஆம் தேதி படப்பிடிப்பு இருக்கிறது, ஜாமீனில் கிடைக்காவிட்டால் அவருடைய வாழ்வாதாரம் பாதிக்கும். மேலும் அவர் செல்போனில் பேசிய படி காரை ஓட்டியதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. யாரும் புகார் தரவில்லை. போலீஸார் அவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் என வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதி, வாசனிடம் ஏன் காரை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேட்டார். அதற்கு வாசன், நான் காரை வேகமாக ஓட்டவில்லை. செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள், நான் திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என வாசன் தெரிவித்து அதையே கடிதமாகவும் எழுதி கொடுத்தார். இதையடுத்து டிடிஎப் வாசனுக்கு, நீதிபதி சுப்புலட்சுமி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications