மனைவியின் 2வது கணவர்.. பாலியல் தொல்லை என மதுரை ஹைகோர்ட் ஓடிய சிறுமியின் தாய்.. கடைசியில பார்த்தால்?
மதுரை: பாலியல் வழக்கு ஒன்றில், புகார் அளித்த சிறுமியின் அம்மா மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. மனுதாரருக்கு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியிலிருந்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்தவர் ராஜமோகன்... இவர் போக்சோ வழக்கில் கைதானவர்.. தன்னுடைய பக்கத்து வீட்டிலிருந்த 5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2019ல் தல்லாகுளம் மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.

வழக்கு விசாரணை: இந்த வழக்கை மதுரை போக்சோ நீதிமன்றம் விசாரித்தது.. இறுதியில் ராஜமோகனுக்கு 5 வருட சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ராஜமோகன், மதுரை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு இதுதான்:
"இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி முரண்பாடான வாக்குமூலம் கொடுத்துள்ளார். சிறுமியின் தாயாரின் 2வது கணவரை மனுதாரர் தாக்கியதால், இவர்களுக்குள் முன்விரோதம் இருந்ததை மறைத்திருக்கிறார்கள்.. தாக்கியதற்கான போதுமான மருத்துவ ஆதாரமும் இல்லை. இதன் மூலம் மனுதாரர் மீதான புகாரில் உண்மையில்லை என்பது தெரிய வருகிறது.
போக்சோ: சிறுமியின் தாயார் மற்றும் அவரது 2வது கணவர் இடையிலான தவறான நட்பை மறைக்க மனுதாரர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தை பொய் பேசாது என்ற இயல்புக்கு எதிராக, சிறுமியும் உள்நோக்கம் தெரியாமல் மனுதாரர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். விசாரணை அதிகாரி நியாயமாக விசாரணை நடத்தாமல் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார். இதனால் மனுதாரர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்.
இந்த வழக்கில் பொய் புகார் அளிக்கப்பட்டதற்காக சிறுமியின் தாயார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மதுரை போலீஸ் கமிஷனர் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இழப்பீடு: மனுதாரருக்கு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியிலிருந்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை திரும்பப் பெற வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications