திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோத டிக்கெட் விற்பனை: குற்றவியல் நடவடிக்கை பாயும் - நீதிமன்றம் உத்தரவு
மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்ய சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்பனையைத் தடுக்க அறநிலையத்துறையும் காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றானது திருச்செந்தூர் முருகன் கோயில். இக்கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு கோயிலில் சட்ட விரோதமாக டிக்கெட் விற்பனை நடைபெறுவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், பக்தர்கள் கோயிலுக்கு மன நிம்மதியைத் தேடித்தான் வருகிறார்கள். அங்கும் சட்டவிரோத செயல்களை அனுமதிக்க முடியாது. திருச்செந்தூர் சுவாமி கோயிலில் சட்ட விரோத தரிசன டிக்கெட் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும்.
முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்பனையைத் தடுக்க அறநிலையத் துறையும், காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும். சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்யும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications