மதுரையின் "கனவு" திட்டம்! ஐடி பார்க்கிற்கு குரல் கொடுத்த சு.வெங்கடேசன்! நேரில் நன்றி சொன்ன இளைஞர்கள்
மதுரை: மதுரையில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமையும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காகக் குரல் கொடுத்து வந்த இளைஞர்களை எம்பி சு.வெங்கடேசன் சந்தித்தார்.
இந்தியாவின் பொருளாதாரத்தில் ஐடி துறையின் பங்களிப்பு மிகப் பெரியது. வரும் காலங்களில் இது மேலும் மேலும் அதிகரிக்கும் என்றே கணிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக நமது நாட்டில் பல நகரங்களில் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்கும் பணிகளில் அந்தந்த மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது.

மதுரை
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னை தான் ஐடி துறையின் மையாக உள்ளது. அதைத் தாண்டி கோவையில் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு நகரங்களைத் தாண்டி மற்ற நகரங்களில் முக்கிய ஐடி நிறுவனங்கள் இல்லை. இந்த நிலையை மாற்றி மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஐடி நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் இது இளைஞர்கள் சொந்த மாவட்டத்திலேயே பணிபுரியும் வாய்ப்பை அமைத்துத் தரும் என்று பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நன்றி
இப்படித்தான் மதுரையில் ஐடி பார்க் அமைய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக மதுரையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்ற அமைப்பும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. இந்தச் சூழலில் தான் சமீபத்தில் மதுரையில் ஐடி பார்க் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதனிடையே ஐடி பார்க் அமைக்கக் குரல் கொடுத்த எம்பி சு.வெங்கடேசன் சந்தித்து மதுரையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.

சு.வெங்கடேசன்
இது தொடர்பாக எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மதுரை மக்கள் மற்றும் இளைஞர்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் முக்கியமானது புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டுமென்பது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் என்னைப் பலமுறை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டோம்.

கோரிக்கை
ஜனவரி மாதம் 19 ம் தேதியன்று சென்னையில் தமிழக முதல்வரைச் சந்தித்து மதுரைக்கு புதிய தொழில்நுட்ப பூங்கா, தொழில்பேட்டை, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காற்று மாசுபாடு மற்றும் பசுமையான மதுரையை உருவாக்கும் பல திட்டங்கள் அடங்கிய கோரிக்கைகளை நானும் எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் வைத்தோம். முதல்வரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கையளித்து அனுப்பினார். ஒரு மாதத்திற்கு முன்பு இக்கோரிக்கைகள் தொடர்பாக தொழில்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், முற்றும் முதன்மை செயலாளர்களை நானும் எங்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான தோழர் எஸ். கண்ணன் அவர்களும் மீண்டும் சந்தித்து வலியுறுத்தினோம்.

முதல்வர் அறிவிப்பு
மதுரையில் நடைபெற்ற "தோள்கொடுப்போம். தொழில்களுக்கு" என்கிற தெற்கு மண்டல மாநாட்டில் விழா பேருரையாற்றிய தமிழக முதல்வர். வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை வெளியிட்டார். அதாவது "மதுரையில் புதிய டைடல் பார்க் துவக்கப்படும். முதற்கட்டமாக 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாட்டுத்தாவணி அருகே 10 ஏக்கரில் அது அமைக்கப்படும். அதன்மூலம் 10,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்" என்று அறிவித்தார். இவ்வறிப்பு மதுரை மக்களுக்குக் குறிப்பாக இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாகத்தான் மதுரை மக்களின் சார்பில் தமிழக முதல்வருக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன்.

நன்றி
மதுரையின் தொழில் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற மதுரையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் (MID - Madurai Infrastructure & Development) என்கிற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மணிகண்டன், ரமேஷ்குமார், விகனேஷ் குமார், ஹரி, விக்னேஷ், அரவிந்த், விஜய், காளிஸ், அர்விந்த் ஆகியோர் எமது அலுவலகத்தில் என்னைச் சந்தித்து இனிப்பு வழங்கி தங்களின் மகிழ்வை பகிர்ந்து கொண்டனர்.

கனவுத்திட்டம்
மதுரையின் நீண்ட நாள் கனவுத்திட்டமான இது அறிவிக்கப்பட்டதில் அனைவரின் முன்முயற்சியும் முக்கியமானது குறிப்பாக நகரின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து சிந்தித்தும், செயல்பட்டுக்கொண்டும் இருக்கிற இது போன்ற இளைஞர்களின் தன்னார்வமான முன்முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியது. அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications